விக்கிப்பீடியா பேச்சு:கையாள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ் விக்கிப்பீடியாவில் கையாட்களைப் பயன்படுத்திச் செயற்படுவது குறித்த கொள்கை தேவை.

பார்க்க:

  1. பயனர் பேச்சு:Theni.M.Subramani#நலமுரண் செயற்பாடுகள் - விளக்கம் கோரல்
  2. சனவரி 29, 2011 தொடக்கம் அக்டோபர் 26, 2013 வரையான சேகரனின் பங்களிப்புகள் மூன்றே வகைப்படும் - 1. சேகரன் நடத்தும் நிறுவனம் தொடர்பான கட்டுரை வெளி பங்களிப்புகள். 2. இரண்டு ஆண்டுகளில் அவர் வாக்களித்த ஒரே நிருவாகத் தேர்தல் தேனி சுப்பிரமணியின் நிருவாகத் தேர்தல் மட்டுமே. 3. சென்னை கூடல் நிகழ்வு பற்றிய கருத்து கேட்புப் பக்கத்தில் தேனி சுப்பிரமணிக்குத் தந்திருக்க வேண்டிய இடம் குறித்து கருத்திடுகிறார்.

கையாள் குறித்த கொள்கை, அத்தகைய முறையீடுகளை அணுகுவதற்கான நடைமுறைகளை உருவாக்குவதற்கான தேவையுள்ளது என்பதைச் சுட்டவே இந்த எடுத்துக்காட்டு. இது தேனி சுப்பிரமணி மீது வைக்கப்படும் முறையீடோ அவர் மீது சாட்டப்படும் அவதூறோ அன்று. நன்றி. --இரவி (பேச்சு) 18:11, 24 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

இது முக்கிய சிக்கலாக உருவெடுக்கக் கூடியது என்பதை ஏற்கிறேன். ஆனால் இதை எப்படிக் கையாள்வது என்பதுகுறித்துத் தெளிவில்லை. விக்கியில் ஒரு சிலரின் நடவடிக்கையில் ஐயம் திரிபற இதுபோன்ற நலமுரண்பாடுகள் சில வேளைகளில் வெளிப்படக்கூடும். ஆனால் சில வேளைகளில் ஒரே மாதிரியான கருத்துக்களைக் கொண்ட இருவரின் தற்செயலான தொகுப்புக்களின்மீது பாய்ந்துவிடாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். சோடாபாட்டில் விக்கிப்பீடியா:ஆலமரத்தடி#“கையாட்கள்” (Meatpuppets) குறித்த நடைமுறைகள் உள்ளனவா ? என்ற இழையில் தெரிவித்துள்ளவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டும். இது தொடர்பான கொள்கையோடு மேலும் ஒரு வழிகாட்டலும் வைக்க வேண்டும். இயன்றவரை விக்கி தொடர்பான நடவடிக்கைகளை விக்கியில் மட்டுமே நிகழ்த்துவதை வலியுறுத்தலாம். எந்தவித உள்நோக்கமும் இல்லாவிட்டாலும் விக்கி உரையாடல்கள் விக்கிக்கு வெளியே தனிமடல்களிலும், முகநூல் போன்ற ஊடகங்களிலும் நடக்கும்போது ஒரு information asymmetry உருவாகிறது. அது சில வேளைகளில் மோசமான புரிந்துணர்வுச் சிக்கலை உருவாக்கலாம். அப்படி இல்லாவிட்டாலும்கூட மற்ற விக்கிப்பீடியர்கள் தர வாய்ப்புள்ள நல்ல கருத்துக்களைத் தவறவிடும் வாய்ப்பும் மிகுதி. இன்னார் சொன்னது, அவரது கருத்தின்வழி நான் தெரிந்து கொண்டது என்பதற்கான அடையாளமும் இல்லாமற் போகும். -- சுந்தர் \பேச்சு 11:31, 27 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

தேனி சுப்பிரமணி மீதான முறையீடு[தொகு]

கூடல் தொடர்பான கருத்துகளைத் தெரிவிக்க தேனி சுப்பிரமணி சேகரனைத் தனது கையாளாக பயன்படுத்தினாரா? இது தொடர்பான பின்னணித் தகவலை இங்கும் இப்பக்கத்தின் தொடக்கத்திலும் தந்துள்ளேன். இவற்றை ஆய்ந்து இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். அதற்கு முன்பு கையாட்கள் தொடர்பான கொள்கை, கையாட்களை இனங்காண்பதற்கான வழிமுறைகளை உருவாக்க வேண்டும். நன்றி.--இரவி (பேச்சு) 06:28, 19 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]