பயனர்:Jagadeeswarann99/அறிமுகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜெகதீஸ்வரன்

எனது பெயர் ஜெகதீஸ்வரன் நடராஜன். "கழனிகள் சூழ்ந்த காட்டுப்புத்தூர்" என்று நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளைவாள் பாடிய தளத்தில் பிறந்தவன். பள்ளி படிப்பினை காட்டுப்புத்தூர் ஜமிந்தார் மேல்நிலைப்பள்ளியிலும், பட்டையப்படிப்பினை காரைக்கால் பாரதியார் பொறியியற் கல்லூரியிலும் முடித்தவன். தற்போது கணினி மென்பொருள் எழுதுனனாக எம்கியூபிக் சொல்யுசனில் பணியாற்றி வருபவன். எண்ணாயிரம் சமணர்களை வாதத்தில் வென்ற சைவத்தின் சொந்தக்காரன். சிறுகவிதையும், சிறுகதையும் இணையத்திலும், இதழ்களிலும் எழுதிவருபவன். ஓவிய, சிற்ப கலைகளை ரசிக்கத் தெரிந்தவன்.

என்னைப் பற்றி ஒரு வார்த்தையில் யாரேனும் கூறு என்று கட்டளையிட்டால்,. "சைவத்தமிழன்" என்பேன்.

விக்கிப்பீடியா பங்களிப்பாளர் அறிமுகம்...
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Jagadeeswarann99/அறிமுகம்&oldid=1444273" இலிருந்து மீள்விக்கப்பட்டது