பயனர்:Chella93/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


Chella93/மணல்தொட்டி
படிமம்:Aazhiyaal IT.jpg
பிறப்புமதுபாஷினி
சூன் 16, 1968 (1968-06-16) (அகவை 55)
திருகோணமலை, இலங்கை
தொழில்1992-1997 English Lecturer (Vavuniya Campus Jaffna Uni)
1999-2019 Software Developer/Contracts Analyst/ Senior IT Contracts Administrator
தேசியம்அவுஸ்திரேலியா
கல்விBA English Lit (smgaw),
MA English(unsw) ,
PGDip IT (unsw)
காலம்1995–இன்று
வகைபடைப்பிலக்கியம், மொழிபெயர்ப்பு, விமரிசனம்
குறிப்பிடத்தக்க படைப்புகள்உரத்துப்பேச(2000), துவிதம் (2006), கருநாவு(2013), பூவுலகைக் கற்றலும் கேட்டலும் (2017)
இணையதளம்
http://aazhiyaal.net/

ஆழியாள் என்ற புனைபெயரில் எழுதும் மதுபாஷினி ரகுபதி ஈழத்தின் குறிப்பிடத்தக்க [1] [2] பெண் கவிஞர்களில் ஒருவர். [3] [4]

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

இவர் 1968ம் ஆண்டு இலங்கையில் திருகோணமலை மாவட்டத்தில் பிறந்தார். அங்கேயே புனித சவேரியார் வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியைக் கற்று மதுரை மீனாட்சி கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் பட்டப்படிப்பையும், அவுஸ்திரேலியாவில் நியூ சவுத் வேல்சு பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டப் படிப்பையும் பெற்றவர். யாழ்ப்பணப் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தில் ஆங்கில விரிவுரையாளராக ஐந்து ஆண்டுகள் பணிபுரிந்து தற்போது ஆத்திரேலியா தலைநகர் கான்பராவில் வசித்து வருகிறார்.

எழுத்துத் துறை[தொகு]

தொண்ணூறுகளில் எழுதத்தொடங்கிய ஆழியாளின் மூன்று கவிதைத் தொகுப்புக்களும் ஓர் மொழிபெயர்ப்பு கவிதைத் தொகுப்பும் இதுவரை வெளிவந்துள்ளன. மொழிபெயர்ப்பு, படைப்பிலக்கியம், விமரிசனம் ஆகியவற்றில் தீவிரமாக ஈடுபடுபவர். இவரது படைப்புகள் மூன்றாவது மனிதன், கணையாழி, சரிநிகர், ஆறாம்திணை, தோழி, உயிர்நிழல், அம்மா, பெண் ஆகிய இலக்கியச் சஞ்சிகைகளில் வெளிவந்துள்ளன. இவரது கவிதைகள் மலையாளத்திலும், கன்னடத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

இவரது நூல்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

தளத்தில்
Chella93/மணல்தொட்டி எழுதிய
நூல்கள் உள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "ஆழியாளின் 'துவிதம்' பற்றிய ஓர் நோக்கு! - மு.பொ (பதிவுகள்)".
  2. "என் ஆதித்தாயின் முதுகில் பட்ட திருக்கைச் சவுக்கடி - குட்டி ரேவதி (கூடு)".
  3. "அவலங்களை எதிர்கொள்ளும் சொற்கள் - மண்குதிரை (இந்து தமிழ்)".
  4. "சுவடுகள் பதியுமொரு பாதை- பூங்குழலி வீரன் (வல்லினம் - கலை, இலக்கிய இதழ் )".
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Chella93/மணல்தொட்டி&oldid=3688279" இலிருந்து மீள்விக்கப்பட்டது