பயனர்:ஆ.சந்திரா/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நெம்மக்கோட்டை சித்திரைத் திருவிழா

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டம் நெம்மக்கோட்டை கிராமத்தில் நடைபெறுகிறது. இக்கிராமத்தில் அமைந்துள்ள சிறீ சித்திவிநாயகர் கோவில் சார்பாக இவ்விழா நடைபெறுகிறது. ஒவ்வோர் ஆண்டும் மே மாதத்தில் இச் சித்திரை திருவிழா கொடி ஏற்றத்துடன் ஆரம்பமாகும். பத்துநாட்கள் தொடா்ந்து விழா நடைபெறும். ஒவ்வொரு நாளும் சுவாமிக்கு சிறப்பு அலங்காரத்துடன் அபிசேகம் நடைபெறும். ஊரைச்சுற்றியுள்ள கிராம மக்கள் அனைவரும் மிக உற்சாகமாக திருவிழாவில் கலந்து கொள்வர்.

கோவிலின் இடப்புறம் அழகிய தீர்த்த குளம் உள்ளது. இதனை ஒட்டி நாடக மேடை உள்ளது. கோவிலின் எதிர்புறம் ஆறு பெரிய ஆலமரங்கள் வளர்ந்து மக்களை இளைப்பாற்றி வருகின்றன. மக்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற காவடி எடுத்தல், பால்குடம் எடுத்தல், முடி காணிக்கை செலுத்துதல், போன்ற நிகழ்ச்சிகளை செய்கின்றனா். தண்ணீர் பந்தல், பொங்கல் போன்றவை ஏற்பாடு செய்யப்பட்டு அனைத்து மக்களுக்கும் அன்வன்ங்கட்ப்டத்கான்தும் வழங்கப்படுகிறது. திருவிழாவின் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். மக்கள் தம் உறவினர்கள் நண்பர்களுடன் இனிதாக கொண்டாடுவர். ஜல்லிக்கட்டுடன் பத்தாம் நாள்விழா இனிதாக நிறைவடைகிறது.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]