பயணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பேருந்து ஒன்றில் ஏறுகின்ற பயணிகள்.

பயணி (passenger) என்ற சொல் ஓர் உந்தில் பயணம் செய்யும் நபரைக் குறிக்கிறது. இது வண்டி ஓட்டுநரையும் வண்டியில் பணி புரிபவரையும் குறிக்காது. இரண்டு வகைகளில் இந்தச் சொல் பயன்படுத்தப்படுகிறது:

  • முதலாவதாக ஓர் தானுந்து அல்லது சிற்றூர்திகளில் பயணிப்பவரைக் குறிக்கும். இந்த ஊர்திகளில் பயணிகள் தங்கள் பயணத்திற்கு கட்டணம் செலுத்தியோ செலுத்தாமலோ பயணம் செய்பவராக இருப்பார்கள்.
  • இரண்டாவதாக தங்கள் பயணத்திற்காக கட்டணம் செலுத்தி பேருந்துகள், தொடர்வண்டிகள், வானூர்திகள், மற்றும் கப்பல்களில் பயணம் மேற்கொள்பவர்களைக் குறிப்பதாகும். இவ்வகை ஊர்திகளில் பயணிக்கும் பணியாளர்கள் பயணிகளாக கருதப்படுவதில்லை.

பெரும்பாலான நாடுகளில் இப்பயணங்களை நடத்தும் நிறுவனங்களுக்கு தங்கள் ஊர்திகளில் பயணிக்கும் பயணிகளுக்கு கொடுக்க வேண்டிய வசதிகள் குறித்து சட்ட கட்டுப்பாடுகள் உண்டு.

படகொன்றில் பயணிகள்
தொடர்வண்டி நிலையமொன்றில் பயணிகள்


"https://ta.wikipedia.org/w/index.php?title=பயணி&oldid=1370424" இலிருந்து மீள்விக்கப்பட்டது