சிற்றூர்தி
சிற்றூர்தி (Van) என்பது பொருட்களையும் மக்களையும் கொண்டு செல்லும் ஊர்தி ஆகும்.[1]
பெயர் விளக்கம்
[தொகு]சிற்றூர்தியின் ஆங்கிலப் பெயரான Van என்பது மூடப்பட்ட ஊர்தியைக் குறிக்கும் Caravan என்ற ஆங்கிலச் சொல்லின் சுருக்கம் ஆகும்.[2]
இந்தியாவில்
[தொகு]இந்தியாவில் சிற்றூர்தி மூலம் பயணஞ்செய்தல் பொதுவான பயணஞ்செய்யும் முறைகளுள் ஒன்றாகக் காணப்படுகிறது. பெரும்பாலும் பாடசாலை மாணவர்களைக் கொண்டு செல்வதற்குச் சிற்றூர்தி பயன்படுத்தப்படுகின்றது.
பயன்பாடுகள்
[தொகு]ஐக்கிய அமெரிக்காவின் நகரப் பகுதிகளில் முழு அளவுச் சிற்றூர்திகள் 1971இலிருந்து பயணச் சிற்றூர்திகளாகப் பயன்படுத்தப்படுகின்றன.
பெரும்பாலான நகர்வாணிபங்களிலும் பொருட்களைக் கொண்டு செல்லச் சிற்றூர்திகள் பயன்படுத்தப்படுகின்றன.
படிச் சிற்றூர்தி
[தொகு]படிச் சிற்றூர்தியானது பெரும்பாலும் வழங்கற்சேவைகள், தூதஞ்சற்சேவை போன்றவற்றுக்காகப் பயன்படுத்தப்படுகின்றது. ஐக்கிய அமெரிக்காவிலும் கனடாவிலும் அஞ்சலகங்களினால் பொதிப் பிரிப்புச் சேவைக்கும் படிச் சிற்றூர்தி பயன்படுத்தப்படுகின்றது.
பெரிய நகரங்களில், படிச் சிற்றூர்திகள் அவற்றின் வாயிலைத் திறந்தபடியே செல்வதை அவதானிக்க முடியும்.