பன்னாட்டுப் பெண் குழந்தைகள் நாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பன்னாட்டு பெண் குழந்தைகள் தினம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பன்னாட்டுப் பெண் குழந்தைகள் நாள்
பிற பெயர்(கள்)பெண் பிள்ளையின் நாள்
வகைஉலகளாவியது
முக்கியத்துவம்சர்வதேச ரீதியில் கல்வி, ஊட்டச்சத்து, குழந்தை திருமணம், சட்ட மற்றும் மருத்துவ உரிமைகளை பெண்பிள்ளைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தல்
நாள்11 அக்டோபர்
நிகழ்வுஆண்டுதோறும்
முதல் முறை11 அக்டோபர் 2012

பன்னாட்டுப் பெண் குழந்தைகள் நாள் (International Day of the Girl Child, Day of the Girl, International Day of the Girl) என்பது ஐக்கிய நாடுகள் சபை அறிவித்த ஒரு பன்னாட்டு நினைவு நாள் ஆகும். பெண் குழந்தைகளுக்கான உரிமைகளையும் சுதந்திரத்தையும் பாதுகாக்கப்பட வேண்டிய அவசியத்தை உணர்த்த அக்டோபர் 11 ஆம் நாளை பன்னாட்டு பெண் குழந்தைகள் தினமாக ஐநா 2011 ஆம் ஆண்டில் அறிவித்தது.[1][2] இந்த நாள் கனடாவினால் தீர்மானிக்கப்பட்டு பிற நாடுகளால் முன்மொழியப்பட்டு உலகமே ஏற்றுக்கொண்டது. இந்நாளில் உலகமெங்கும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்தான விழிப்புணர்வு பரப்புரைகள் மேற்கொள்ளப்படுகிறது.

பாலின சமத்துவம், சகல துறைகளிலும் சமத்துவமான வாய்ப்பு, கல்வி உரிமை, பாதுகாப்பு, அங்கீகாரம், வளர்ச்சியை அதிகரித்தல், வன்முறைகளை களைதல் போன்றனவற்றிற்கு சமூகம் ஒத்துழைப்புக் கொடுத்து இந்தப்பெண் குழந்தைகள் நினைத்ததை சாதிக்க உறுதுணையாக நின்று, இவர்கள் பின்னாளில் சாதனைப்பெண்களாக மிளிர வைக்கும் அவசியத்தை நினைவுகூரும் நாள்.

பெண் குழந்தைகள் பிறப்பு என்பது பெற்றோருக்கு ஏற்படும் பொருளாதார சுமை என்கின்ற கருத்தியலை மாற்றியமைக்கவும் இவ்வுலகில் உயிர்கள் ஒவ்வொன்றும் தோன்றவும் சுதந்திரமாய் வாழவும் இயற்கையான உரிமைகள் உள்ளன் என்பதை உணர்த்தவும் இந்நாளில் பல நடவடிக்கைகளை தன்னார்வ அமைப்புகள் மக்கள் நல அரசகள் உலகம் முழுவதும் முன்னெடுக்கப்படுகிறது.

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  • UN (2015). "International Day of the Girl Child October 11". Department of Public Information, UN. பார்க்கப்பட்ட நாள் 25 ஆகத்து 2016.

வெளி இணைப்புகள்[தொகு]