பன்னாட்டு இரைச்சல் விழிப்புணர்வு நாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பன்னாட்டு இரைச்சல் விழிப்புணர்வு நாள் (International Noise Awareness Day) என்பது உலகளாவிய ஒரு பரப்புரையாகும். இது  1996 ஆம் ஆண்டு செனட் ஆஃப் ஹியரிங் அண்ட் கம்யூனிகேஷன் (சி.சி.சி)-ஆல் நிறுவப்பட்டது.  மக்களின் நலன் மற்றும் ஆரோக்கியத்தை நோக்கத்திற்காக இரைச்சல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது இதன் நோக்கமாகும். இரைச்சல் பல வழிகளில் மக்களை பாதிக்கிறது, குறிப்பாக இதனால் பொதுமக்களுக்கு காது கேளாமை மற்றும் எரிச்சல் போன்றவற்றை அடைகின்றனர். உலகளாவிய ரீதியில், இந்த நிகழ்வில் பல்வேறு நடவடிக்கைகளால் பங்கேற்க மக்கள் அழைக்கப்படுகிறார்கள்: இந்த நிகழ்வில்  ஒலி மருத்துவ நிபுணர்கள், பொது சுகாதார துறையினர், நிபுணர்கள் போன்றோரால் சுவரோட்டிகள் போன்ற நடவடிக்கைகள் வழியாக இரைச்சல் அளவை அளவிடும் நடவடிக்கைகள் போன்ற செயல்களில் ஈடுபட பல்கலைக்கழகங்கள் மற்றும் பாடசாலைகள் போன்ற இடங்களிலும் பொது மக்களிடமும் பங்கேற்க அழைத்து பரப்புரை மேற்கொள்ளப்படுகிறது. இரைச்சல் நாளானது ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் கடைசி புதன்கிழமை அன்று அனுசரிக்கப்படுகிறது. இரைச்சலைப் பற்றி மட்டுமல்லாமல், இரைச்சலைக் குறைப்பதிலும் கவனம் செலுத்தும் நோக்கத்துடன் பிரேசில், சிலி, ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின் மற்றும் அமெரிக்கா போன்ற உலகில் உள்ள பல நாடுகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது சம்பந்தமான நிகழ்வுகள் கடந்த வருடங்களில் சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியா உட்பட ஆசிய நாடுகளிலும் நடந்துள்ளன.

மேற்காேள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]