பனாமாவின் பூச்சந்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பனாமாவின் இஸ்த்மஸ்

பனாமாவின் நிலச்சந்தி ( எசுப்பானியம்: Istmo de Panamá ), வரலாற்று வாயிலாக தாரியெனின் நிலச்சந்தி எனவும் அழைக்கபெறும் இது, கரிபியன் கடலுக்கும் பசிபிக் பெருங்கடலுக்கும் இடையில் அமைந்துள்ள குறுகிய நிலப்பரப்பாகும், அஃது வடக்கு மற்றும் தென் அமெரிக்காவை இணைக்கிறது. இது பனாமா நாடு மற்றும் பனாமா கால்வாய் ஆகியவற்றைக் கொண்டுள்ளது . பல நிலச்சந்தி போலவே, இது சிறந்த திறஞ்சார்ந்த மதிப்பின் இருப்பிடமாகும்.

2.8 பத்துலட்ச ஆண்டுகள் முன்னே[1], இந்நிலச்சந்தி அட்லாண்டிக் மற்றும் பசிபிக் பெருங்கடற்களைப் பிரித்து உருவானது மற்றும் வளைகுடா நீரோட்டத்தையும் உருவாகியது.

வரலாறு[தொகு]

கரிபியன் கடற்கரையில் பயணம் செய்யும் போது வாஸ்கோ நீஸ் டி பால்போவா தென் கடல் பற்றி அவ்விடம் வாழ்வோரிடம் கேட்டறிந்தார். [2] செப்டம்பர் 25, 1513 அன்று அவர் பசிபிக் பகுதியைக் கண்டார். 1519 ஆம் ஆண்டில் பனாமா நகரம் பசிபிக் கடற்கரையில் ஒரு சிறிய மரபுவழி குடியேற்றத்திற்கு அருகில் நிறுவப்பட்டது. பெரு நாடு கண்டறியப்பட்டப் பிறகு, இவ்விடம் முதன்மை வணிக துறைமுகமாகவும், ஆட்சியமைப்பு மையமாகவும் உருவானது. 1671 ஆம் ஆண்டில் வெல்ஷ் கொள்ளையர் ஹென்றி மோர்கன் கரிபியன் பக்கத்திலிருந்து பனாமாவின் நிலச்சந்தியை கடந்து நகரத்தை அழித்தார். இந்நகரம் மேற்கே சில கிலோமீட்டர்கள் தள்ளி ஒரு சிறிய தீபகற்பத்தில் இடம் மாற்றப்பட்டது. பழைய நகரமான பனாமே விஜோவின் இடிபாடுகள் பாதுகாக்கப்பட்டு 1997 இல் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டன .

உயிர்க்கோளம்[தொகு]

இரு பெரும் நிலப்பரப்புகளுக்கு இடையே இணைக்கும் பாலமாக, பனாமாவின் உயிர்க்கோளம் வடக்கு மற்றும் தென் அமெரிக்காவிலிருக்கும் விலங்கினங்கள் மற்றும் தாவரங்களால் நிரம்பியுள்ளது. சான்றாக, நிலச்சந்தியின் பகுதியில் 978 க்கும் மேற்பட்ட பறவையினங்கள் உள்ளன. [3] வெப்பமண்டல காலநிலை, ஏராளமான பெரிய மற்றும் ஒளிமிகு வண்ண உயிரினங்கள், பூச்சிகள், நீர்நில வாழ் விலங்குகள், பறவைகள், மீன்க்ள் மற்றும் ஊர்வனவற்றை ஊக்குவிக்கிறது. ஒரு மலைத்தொடரால் அதன் நீளத்துடன் பிரிக்கப்பட்டுள்ள இந்நிலத்தின் வானிலை, பொதுவாக அட்லாண்டிக் (கரீபியன்) பக்கத்தில் ஈரமாகவும், பசிபிக் பக்கத்தில் ஈரம் மற்றும் வறண்ட பருவங்களாக தெளிவான பிரிவைக் கொண்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பனாமாவின்_பூச்சந்தி&oldid=3596114" இருந்து மீள்விக்கப்பட்டது