பனமுக்கும்பள்ளி சாஸ்தா கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பனமுக்கும்பள்ளி சாஸ்தா கோயில் இந்தியாவின் கேரளாவின் திருச்சூர் நகரில் அமைந்துள்ள ஒரு இந்துக் கோயிலாகும். இக்கோயிலின் மூலவர் அய்யப்பன் ஆவார். இக்கோயிலில் ஆண்டுதோறும் திருச்சூர் பூரம் சிறப்பாக நடத்தப்பெறுகிறது. [1]

மூலவர்[தொகு]

இக்கோயில் திருச்சூர் வடக்குமநாதன் கோயிலிருந்து கிழக்கில் 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இங்குள்ள மூலவர் 2,500 ஆண்டு பழமையுடையவராகக் கருதப்படுகிறார். மூலவர் பத்மாசனத்தில் உள்ளார். சாஸ்தாவை இவ்வாறாக ஒரு வித்தியாசமான கோலத்தில் காண்பது மிகவும் அரிதாகும். இக்கோயிலில் சிவன், விநாயகர், துர்க்கை உள்ளிட்ட பிற தெய்வங்கள் உள்ளன. மிகுந்த ஈடுபாட்டுடன் மூலவரை தரிசித்தால் சகல நோய்களும் விலகும் என்று நம்புகின்றனர். [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Panamukkumpally sree Sastha Temple". Thrissur Pooram Festival.
  2. Panamukkumpally Dharma Sastha Temple