பதர்பூர் அனல் மின் நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பதர்பூர் அனல் மின் நிலையம் Badarpur Thermal Power Station
பதர்ப்பூர்அனல்மின் நிலையம் வான்வழி காட்சி
நாடுஇந்தியா
நிலைActive
இயங்கத் துவங்கிய தேதி1973
இயக்குபவர்தேசிய அனல் மின் நிறுவனம்
Source: https://www.ntpc.co.in/

பதர்பூர் அனல் மின் நிலையம் தில்லியின் பதர்பூர் பகுதியில் அமைந்துள்ளது. இதை தேசிய அனல் மின் நிறுவனம் கட்டுப்படுத்துகிறது.

இது தில்லிக்கு மின்சாரம் வழங்குகிறது. யமுனை ஆற்றின் கால்வாய் மூலம் நீரைப் பெற்று சூடான இயந்திரங்கள் குளிர்விக்கப்படுகின்றன.

சுற்றுச்சூழல் விளைவுகள்[தொகு]

2015 ஆம் ஆண்டு அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் நடுவம் நடத்திய ஆய்வின் படி இந்தியாவிலேயே சூழலை மிகவும் மாசுபடுத்தும் மின் நிலையம் இதுவே ஆகும். தில்லியின் மின் தேவையில் எட்டு சதவீதத்தை மட்டுமே நிறைவு செய்யும் இந்நிலையம் தில்லியில் மொத்த மின்நிலையங்களால் வெளிப்படும் மாசுத்துகள்களின் தொகையில் 80 முதல் 90% வரை வெளியிடுகிறது.[1]

தில்லியில் ஏற்பட்ட பெரும் புகை மூட்டத்தின் போது காற்று மாசின் அளவினைக் குறைப்பதற்காக இந்த மின்நிலையம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இது 2017 மார்ச்சு 16-இல் மீண்டும் மின் உற்பத்தியைத் துவக்கியது. சுற்றுச்சூழல் மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நிறுவனம் இந்த மின் நிலையத்தை 2018 சூலை மாதத்தில் மூடிவிடப் பரிந்துரைத்து உள்ளது.[2]

சான்றுகள்[தொகு]