தில்லிப் பெரும் புகைமூட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
புதில்லி இரயில்வே நிலையத்தில் ஏற்பட்ட பெரும் புகைமூட்டம்

தில்லிப் பெரும் புகை மூட்டம் (Smog in Delhi) என்பது 2016-ஆம் ஆண்டு நவம்பர்த் திங்கள் ஒன்றாம் தேதியில் இருந்து ஒன்பதாம் தேதி வரை காற்று மாசுபாட்டின் காரணமாக தில்லியிலும் அதன் சுற்றுப்பகுதிகளிலும் ஏற்பட்ட புகைமூட்டத்தைக் குறிக்கும்[1] . இச்சமயத்தில் காற்று மாசுபாடானது PM2.5 மற்றும் PM10 போன்ற அதிகப்படியான அளவுகளில் இருந்தன [2]. 1999-ஆம் ஆண்டில் இருந்து எடுக்கப்பட்ட அளவீடுகளில் இதுவே அதிகமான மாசுபாடு ஆகும் [3].

இந்தப் பெரும் புகை மூட்டத்தினால் பொதுப் போக்குவரத்து அதிகமாகப் பாதிக்கப்பட்டது. குறிப்பாக இரும்புவழிப் போக்குவரத்து, விமானப் போக்குவரத்து ஆகியவற்றை இயக்குவதில் இடையூறுகள் ஏற்பட்டன.[4]

பின்னணி[தொகு]

தற்போதுவரை எடுக்கப்பட்ட ஆய்வுகளின் முடிவின் மூலம் குளிர்மையான காலநிலையாலும், காற்றின் மந்தநிலையினாலும் இதற்கான வாய்ப்பு ஏற்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. மேலும் அரிதாள் கட்டையை எரித்தல், குப்பைகளை எரித்தல் , சாலை மாசு, தொழிற்சாலைக் கழிவுகள், வண்டிப் புகை, மின் உற்பத்தி நிலையம் போன்றவைகள் தான் தில்லியில் ஏற்பட்ட பெரும் புகை மூட்டத்திற்கு காரணமாகப் பார்க்கப்படுகிறது.

காற்று மாசுபாடானது PM2.5 மற்றும் PM10 போன்ற அதிகப்படியான அளவுகளில் இருந்தன.

வெப்பநிலை[தொகு]

இந்தச் சமயத்தில் புது தில்லியின் வெப்பநிலையானது 15 முதல் 29 டிகிரி செல்சியசாக இருந்தது. (~66 டிகிரி பாரன்ஃகைட்)

விளைவுகள்[தொகு]

சுகாதார விளைவுகள்[தொகு]

புது தில்லி அரசு, ஒவ்வாமை, ஈழை நோய், கண் எரிச்சல், ஈழை நோய் போன்ற நோய்களுக்கான சுகாதார ஆலோசனைகளை வழங்கியது. [5]

மாநில அரசின் நடவடிக்கைகள்[தொகு]

காற்றில் அதிக அளவு மாசு கலந்திருப்பது கண்டறியப்பட்டதனால் மத்திய அரசினால் ,சுகாதார அவசரகாலம் அறிவிக்கப்பட்டது. அன்றைய தினம்பள்ளிக்கூடங்கள் , கல்லூரிகள், மத்திய மற்றும் மாநில அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

நிகழ்வுகள்[தொகு]

பெரும் புகைமூட்டச் சமயத்தில் தான் இலங்கைத் துடுப்பாட்ட அணியின் இந்தியச் சுற்றுப் பயணம் 2017-2018 முன்றாவது துடுப்பாட்டப் பொட்டியின் இரண்டாவது நாள் போட்டி புது தில்லியில் நடந்து கொன்டிருந்தது. அப்போது இலங்கை வீரர்கள் விளையாடுவதை நிறுத்திவிட்டு முகமூடி அணிந்தனர். அந்த அணியைச் சேர்ந்த லகிரு கமேஜ் தன்னால் இயல்பாக சுவாசிக்க முடியவில்லை எனத் தெரிவித்தார்.இலங்டை அணியின் பயிற்சியாளரான நிக் போதாஸ் , புது தில்லி மைதானத்தின் கடுமையான மாசு காரணமாக சுரங்கா லக்மலுக்கு கடுமையான வாந்தி ஏற்பட்டதாகத் தெரிவித்தார். பின் இந்த ஆட்டமானது 12.32 முதல் 12.49 வரை நிறுத்தப்பட்டது.

கட்டுப்படுத்தல் முயற்சிகள்[தொகு]

புதுதில்லியின் முதலமைச்சராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் பின்வரும் அறிவுத்தல்களை வழங்கினார்.[6]

புகைமூட்டத்தைக் குறைக்க பின்வரும் தற்காலிக நடவடிக்கைகளை தில்லி அரசு மேற்கொன்டது. தில்லியில் உள்ள அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகள் அனைத்திற்கும் அடுத்த முன்று நாட்கள் விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டது. சுகாதாரத்துறை அமைச்சரகம் இலைகள் எரிக்கப்படுவதைக் கண்காணிப்பதற்காக செயலி ஒன்றை அறிமுகம் செய்தது. சாலைகளில் உள்ள மாசுகளை நீக்கும் பணியானது நவம்பர் 10 முதல் துவங்கத் திட்டமிடப்பட்டது. அனைத்து சாலைகளிலும் வரும் நாட்களில் நீர் தெளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. பொதுமக்கள் இயன்றவரை வெளியில் செல்வதைத் தவிர்க்க அறிவுறுத்தப்பட்டனர். நிலக்கரியை எரிபொருளாகக் கொண்டு இயங்கும் பதர்பூர் அனல்மின் நிலையம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. பட்டாசு விற்பனை தில்லியில் தடை செய்யப்பட்டது. சாலைகளில் நீர் தெளிக்கும் பணி நடைபெற்றது. கட்டிடங்கள் கட்டுவதும் இடிப்பதும் தற்காலிகமாகத் தடை செய்யப்பட்டது.

சான்றுகள்[தொகு]