பண்டாரவளை மத்திய கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பண்டாரவளை மத்திய கல்லூரி
அமைவிடம்
பண்டாரவளை
இலங்கை இலங்கை
தகவல்
வகைதேசியப் பாடசாலை
குறிக்கோள்கள்Paraththan Patipajjathi
தொடக்கம்1948
நிறுவனர்அமரசேகர
அதிபர்எம்.எம். விமலசேகர
பணிக்குழாம்120
தரங்கள்வகுப்புகள் 1 - 13
பால்கலவன்
வயது6 to 19
மொத்த சேர்க்கை4000
நிறங்கள்        
இணைப்புபௌத்தம்
இணையம்

பண்டாரவளை மத்திய கல்லூரி (Bandarawela Central College) இலங்கையில் மத்திய மலைநாட்டின் பதுளை மாவட்டத்தில் அமைந்துள்ள முன்னணிப் பாடசாலைகளில் ஒன்றாகும். தேசியப் பாடசாலையான இது ஒரு கலவன் பாடசாலையாகும்.

இப்பாடசாலை 1948 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. அமரசேகர என்பவரே இப்பாடசாலையை ஆரம்பிப்பதில் முக்கிய பங்களிப்பினை வழங்கினார். கல்வித்துறையில் இப்பாடசாலை தொடர்ச்சியாக பல சாதனைகளை படைத்து வந்துள்ளது. இப்பாடசாலையில் கற்ற பலர் இலங்கையில் சிறந்த கல்விமான்களாகவும், சமூகத்தில் மதிக்கத்தக்கவர்களாகவும் உள்ளனர். இங்கு தரம் 1 - 13 வரை வகுப்புகள் உள்ளன. 4000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கின்றனர்.

இதன் தற்போதைய அதிபராக எம்.எம். விமலசேகர உள்ளார். இப்பாடசாலையில் போதனை சிங்கள மொழியில் பிரதானமாக அமைந்துள்ளது. ஆங்கிலமொழி வகுப்புகளும் காணப்படுகின்றன.

வெளியிணைப்புக்கள்[தொகு]