உள்ளடக்கத்துக்குச் செல்

பட்டியாலா அட்டிகை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பட்டியாலா அட்டிகை அணிந்தபடி 1911இல் மன்னர் பூபிந்தர் சிங்

பட்டியாலா அட்டிகை ( Patiala Necklace) என்பது 1928இல் ஹவுஸ் ஆஃப் கார்டியால் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஒரு கழுத்தணி ஆகும்.[1]   இது பட்டியாலா சமஸ்தானத்தின் மகாராஜாவான பூபிந்தர் சிங்குக்காக உருவாக்கப்பட்டது.[2]

இந்தக் கழுத்தணியில் உலகின் ஏழாவது பெரிய வைரமான "டீ பியர்ஸ்" உள்ளிட்ட 2,930 வைரங்கள் இருந்தன. அந்த டீ பியர்ஸ் வைரமானது வெட்டுவதற்குமுன் 428 காரட் எடையைக் கொண்டிருந்தது. அதன் இறுதி வடிவில் 234.65 காரட் எடை கொண்டதாக இருந்தது.[3] இந்த நகையில்  18 முதல் 73 காரட் வரையிலான ஏழு பெரிய பெரிய வைரங்களும், பல பர்மிய மாணிக்கங்களும் அடங்கி இருந்தன.[4]

இந்த நகையானது 1948ஆம் ஆண்டு பட்டியாலா சமஸ்தான கருவூலத்திலிருந்து காணாமல் போனது.[5]

1982இல் ஸ்விட்சர்லாந்தின் ஜெனீவா நகரத்தில் ஏலம் ஒன்று நடத்தப்பட்டது. அதில் டி பியர்ஸ் வைரம் மட்டும் ஏலத்துக்கு வந்தது.   அங்கே, அந்த வைரமானது 3.16 மில்லியன் டாலர்கள்வரை ஏலம் கேட்கப்பட்டது, ஆனால் இது என்ன விலைக்கு வாங்கப்பட்டது என்பது தெளிவற்று உள்ளது.[6][7]

1998 இல் கார்ட்டியே நிறுவனத்தைச் சேர்ந்த எரிக் என்பவர், இலண்டனில் பழைய நகைகளை விற்கும் கடை ஒன்றில் பட்டியாலா நெக்லெசின் பாகங்களைக் கண்டார்.[1] அதில் பதிக்கப்பட்டிருந்த பர்மிய மாணிக்கங்கள், 18 முதல் 73 கேரட் எடையுள்ள வைரங்கள் பதிக்கப்பட்ட பதக்கம் உள்ளிட்ட நகையின் பெரும் பகுதி காணாமல் போயிருந்தது. அதிலிருந்த பல வைரக்கற்களும், பர்மிய மாணிக்கக்கற்களும் காணாமல் போயிருந்தன. இந்த மீதமிருந்த நகையை கார்ட்டியே நிறுவனம் விலைகொடுத்து வாங்கியது. அதன்பிறகு நான்கு ஆண்டுகள் செலவழித்து பழைய நகையைப்போலவே அதை மீளுருவாக்கம் செய்தனர். அந்த நகையில் காணாமல் போயிருந்த வைரங்களுக்கு மாறாக க்யூபிக் சிர்கோனியா மற்றும் செயற்கை வைரங்களைப் பதித்தனர். அப்படியே பதக்கத்தில் அசல் டி பியர்ஸ் வைரத்தின் பிரதி ஒன்றைப் பதித்தனர்.[8][9][10][11]

இந்த நகையை மையமாக கொண்டு ஒரு ஆவணப்படமானது டாக் & பிலிம் இன்டர்நேஷனால் எடுக்கப்பட்டது[12].

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 "Jewels in Motion: The Patiala Necklace". www.thecourtjeweller.com. பார்க்கப்பட்ட நாள் 2018-03-04.
 2. "The Maharaja's Crown Jewels ~ The Patiala Necklace". Victoria Raj. பார்க்கப்பட்ட நாள் 2018-03-04.
 3. "Bhupinder Singh's necklace". www.livemint.com. பார்க்கப்பட்ட நாள் 2018-03-04.
 4. http://www.beau-rivage.ch/maj/pdf/carnets_de_route/UK/BAT_CDR_19-ANGLAIS_-_DEF.pdf பரணிடப்பட்டது 2013-12-04 at the வந்தவழி இயந்திரம்.
 5. "The strange mystery of the Patiala Necklace – and its odd reappearance". coolinterestingstuff.com. பார்க்கப்பட்ட நாள் 2018-03-04.
 6. "The De Beers Diamond".
 7. "De Beers Diamond - The Second-Largest Faceted Yellow Diamond".
 8. http://www.beau-rivage.ch/maj/pdf/carnets_de_route/UK/BAT_CDR_19-ANGLAIS_-_DEF.pdf பரணிடப்பட்டது 2013-12-04 at the வந்தவழி இயந்திரம்.
 9. "The De Beers Diamond". பார்க்கப்பட்ட நாள் 2011-08-27.
 10. "Patiala necklace, world's most expensive jewelry". Archived from the original on 2011-04-30. பார்க்கப்பட்ட நாள் 2011-08-27.
 11. "The missing necklace". Archived from the original on 2004-04-30. பார்க்கப்பட்ட நாள் 2011-08-27.
 12. "The Patiala Necklace". Archived from the original on 2018-09-21. பார்க்கப்பட்ட நாள் 2018-09-21.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பட்டியாலா_அட்டிகை&oldid=3718167" இலிருந்து மீள்விக்கப்பட்டது