படையணிவேட்டம் தேவி கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
படையணிவேட்டம் தேவி கோயில்

படையணிவேட்டம் தேவி கோயில் கேரளாவில் உள்ள ஒரு இந்து கோவில் ஆகும். இக்கோயில் தென்னிந்திய மாநிலமான கேரளாவில் ஆலப்புழா மாவட்டத்தில் மாவேலிக்கரா வட்டத்தில் வள்ளிக்குன்னம் என்னுமிடத்தில் அமைந்துள்ளது. மாவேலிக்கரைக்கு தெற்கில் 10 கி.மீ. தொலைவிலும் NH 47 நெடுஞ்சாலையில் ஓச்சிராவிலிருந்து கிழக்கில் 9 கி.மீ. தொலைவிலும் உள்ளது. [1]

பின்னணி[தொகு]

ஒரு முறை கோயில் விழாவின்போது நடு இரவில் மக்கள் இரு புனிதப் பெண்களை பக்தர்கள் பார்த்தனர். விழாவின் வெளிச்சத்தின்போது அவர்கள் அந்த இருவரைப் பார்த்தனர். பின்னர் அவ்விருவரையும் காணவில்லை. இறையருளால் அவர்கள் துர்க்கை என்றும் பத்ராதேவி என்றும் தெரிய வந்தது.[2]வள்ளிக்குன்னம் படையணிவேட்டம் தேவி கோவில் பல நூற்றாண்டுகளாக உள்ளது. கிராமப்புற மக்களிடையே களரி தெய்வ வழிபாடு பொதுவாக இருந்தது. படையணி, தோட்டம் பாட்டு, களமெழுத்துப் பாட்டு போன்றவை களரி தெய்வத்தின் அருளைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்படுவதாகும்.

மேற்கோள்கள்[தொகு]