படுகை அணி
கணிதத்தில் படுகை அணி (incidence matrix) என்பது இரு தொகுதிகளின் உறுப்புகளுக்கு இடையேயுள்ள படுகை உறவைக் காட்டும் ஒரு தருக்க அணியாகும். இரு தொகுதிகளையும் முறையே X, Y என எடுத்துக்கொண்டால், X இன் உறுப்புகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு நிரையும் (வரிசையும்) Y இன் ஒவ்வொரு உறுப்புகளுக்கும் ஒரு நிரலும் படுகை அணியில் இருக்கும். முதல் தொகுதியின் உறுப்பு x க்கும், இரண்டாவது தொகுதி y க்கும் இடையே உறவு (படுகை) இருந்தால், x நிரை மற்றும் y நிரலிலுள்ள உறுப்பு '1' ஆகவும், x க்கும் y க்கும் இடையில் உறவு இல்லாவிடில் '0' ஆகவும் இருக்கும்.
கோட்டுருவியல்
[தொகு]திசையிலா, திசையுள்ள கோட்டுருக்கள்
[தொகு]கோட்டுருவியலில் ஒரு கோட்டுருவிற்கு திசைபோக்குள்ள மற்றும் திசைபோக்கற்ற என இருவிதமான படுகை அணிகள் உள்ளன.
ஒரு திசையிலாக் கோட்டுருவின் திசைப்போக்கற்ற படுகை அணி (அல்லது சுருக்கமாக படுகை அணி) B பின்வருமாறு வரையறுக்கப்படுகிறது:
- (n = கோட்டுருவின் முனைகளின் எண்ணிக்கை; m = கோட்டுருவின் விளிம்புகளின் எண்ணிக்கை)
- எடுத்துக்காட்டு
திசையிலாக் கோட்டுரு | படுகை அணி | ||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
= |
|
கோட்டுருவின் ஒவ்வொரு விளிம்பும் இரு முனைகளுடன் இணைக்கப்பட்டிருப்பதால், படுகை அணியின் ஒவ்வொரு நிரலின் கூட்டுத்தொகையும் 2 ஆக உள்ளது.
திசையுள்ள கோட்டுருவின் படுகை அணி B பின்வருமாறு வரையறுக்கப்படுகிறது:
- (n = கோட்டுருவின் முனைகளின் எண்ணிக்கை; m = கோட்டுருவின் விளிம்புகளின் எண்ணிக்கை)
(பல கணித நூலாசிரியர்கள் எதிர்க் குறி வழமையையும் பயன்படுத்துகின்றனர்)
மேற்கோள்கள்
[தொகு]- Diestel, Reinhard (2005), Graph Theory, Graduate Texts in Mathematics, vol. 173 (3rd ed.), Springer-Verlag, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-540-26183-4
- Jonathan L Gross, Jay Yellen, Graph Theory and its applications, second edition, 2006 (p 97, Incidence Matrices for undirected graphs; p 98, incidence matrices for digraphs)
வெளியிணைப்புகள்
[தொகு]- Weisstein, Eric W., "Incidence matrix", MathWorld.