தருக்க அணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கணிதத்தில் தருக்க அணி (logical matrix) என்பது, பூலிய ஆட்களமான B = {0, 1}. இன் உறுப்புகளாலான அணியாகும். இவ்வணி இரும அணி (binary matrix), உறவு அணி (relation matrix), பூலிய அணி (Boolean matrix), (0, 1) அணி எனவும் அழைக்கப்படும். இவ்வகையான அணியை ஒரு சோடி முடிவுறு கணங்களுக்கிடையே உள்ள ஈருறுப்பு உறவைக் குறிப்பதற்குப் பயன்படுத்தலாம். m x n வரிசைகொண்ட இரும அணிகளின் எண்ணிக்கை 2mn ஆகும்.

ஒரு உறவின் அணிக் குறியீடு[தொகு]

X , Y எனும் இரு முடிவுறு குறியிடப்பட்ட கணங்களுக்கு இடைப்பட்ட ஈருறுப்பு உறவு R ( RX×Y) எனில், ஒரு தருக்க அணி ( M) மூலம் R ஐ உருவகிக்கலாம்:

இந்த அணியின் நிரை மற்றும் நிரல்களை எண்ணிடுவதற்காக, X , Y அணிகளின் உறுப்புகள் நேர்ம முழுவெண்களைக் கொண்டு குறியிடப்படுகின்றன. சுட்டெண் i இன் மதிப்புகள் 1 முதல் X கணத்தின் அளவையெண் வரையும், j இன் மதிப்பு 1 முதல் Y கணத்தின் அளவையெண் வரையும் இருக்கும்.

எடுத்துக்காட்டுகள்[தொகு]

  • {1, 2, 3, 4} கணத்தின் மீது வரையறுக்கப்பட்ட ஈருறுப்பு உறவு R:
a ஆனது b ஐ மீதமின்றி வகுக்கும் எனில் aRb
2R4 என்பது சரி. ஆனால் 3R4 ஆக இருக்க முடியாது (4 ஐ மூன்றால் வகுக்கும் போது 1 மீதியாகக் கிடைக்கும்).
R உறவிற்கான வரிசைச் சோடிகளின் கணம்:
{(1, 1), (1, 2), (1, 3), (1, 4), (2, 2), (2, 4), (3, 3), (4, 4)}.
இந்த உறவின் பூலிய அணி உருவகிப்பு:
  • ஒவ்வொரு நிரை மற்றும் நிரலில் ஒரேயொரு உறுப்பு மட்டும் 1 ஆகவும், ஏனைய உறுப்புகளைப் பூச்சியமாகவும் கொண்ட வரிசைமாற்ற அணி ஒரு (0,1)-அணியாகும்.
  • சமன் உறவின் அணி உருவகிப்பு ஒரு முற்றொருமை அணியாக இருக்கும். முற்றொருமை அணியின் முதன்மை மூலைவிட்ட உறுப்புகள் 1 களாகவும், ஏனைய உறுப்புகள் 0 ஆக இருக்குமாதலால், சமன் உறவின் அணி உருவகிப்பு ஒரு பூலிய அணியாகும்.

அடிக்குறிப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தருக்க_அணி&oldid=2275224" இருந்து மீள்விக்கப்பட்டது