படிமப் பேச்சு:Sundar and Jimbo.jpg

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சுந்தர் இன்றைக்குத்தான் உங்கள் புகைப்படம் பார்த்தேன். தமிழ் விக்கிப்பீடியா சார்பாக ஜிம்மி வேல்ஸைச் சந்தித்தில் பெரு மகிழ்ச்சி. ஆட்சேபனை இல்லை என்றால் ஜிம்மி வேல்ஸ் கட்டுரையில் இப்படத்தைச் சேர்த்துவிடவும். --Umapathy 09:19, 5 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]

நன்றி உமாபதி. எனக்கு இதில் எந்த சிக்கலும் இல்லை. ஆனால், இது பொருத்தமானதுதானா எனத் தெரியவில்லை. ஜிம்போ வேல்சு தனியாக இருக்கும் நிழற்படம் பொருந்தும். ஒருவேளை இவரது பயணங்களைப் பற்றியும், விக்கிபீடியர்களைச் சந்திப்பதைப் பற்றியும் எழுதினால் ஒருவேளை இது பொருந்தும். எப்படியானாலும், என் படத்தை அக்கட்டுரையில் நானே செர்ப்பது முறையாகாது. மற்ற பயனர்களுக்கு உடன்பாடென்றால், நீங்களே சேர்த்துவிடுங்கள்.
சில குறிப்புகள்: இந்த விக்கி சந்திப்பிற்கு முன்னர் அவர் அளித்த பேட்டிகளில் தமிழ் விக்கியைப் பற்றி எதுவும் கூறாமல் கன்னடம் மற்றும் பெங்காலி விக்கிகளைப் பற்றி மட்டுமே குறிப்பிட்டிருந்தார். இச்சந்திப்பின்பொருட்டு நான் அனுப்பிய மின்னஞ்சல்களில் இதைச் சுட்டிக்காட்டி த.வி. கட்டுரை எண்ணிக்கை மற்றும் தரத்தைப் பற்றிய தரவை அனுப்பியபின் அவர் தான் அதைக் கவனிக்கத் தவறிவிட்டதாகவும், இனிவரும் நேர்காணல்களிலும் பேச்சுக்களிலும் மறவாமல் குறிப்பிடுவதாகவும் பதிலளித்தார். அவ்வண்ணமே பல செவ்விக்களில் த.வியைக் குறிப்பிட்டுள்ளார்.
இச்சந்திப்பின்போது அவரது முதன்மை கருத்து இந்திய மொழி விக்கிக்களை எப்படி மேலும் வளர்த்தெடுப்பது என்பதைப் பற்றித்தான். அவர் கருத்தில் ஆயிரம் கட்டுரைகளைத் தாண்டிய விக்கிக்கள் தழைக்கும் வாய்ப்புகள் அதிகம். இதற்குத் தேவைப்பட்டால் பிரையானிடம் கூறி தமிழ் முதலிய மொழிகளில் உள்ளீடு செய்யும் செயலிகளை மீடியாவிக்கி மென்பொருளில் இணைக்கமுடியுமா என்று பரிசீலிக்கலாம் என்று கூறினார்.
தமிழ் விக்கி முதலானவற்றில் இந்தியாவிற்கு வெளியிலிருந்து அதிகம் தொகுப்புகள் வருவது எங்கணம் என்று கேட்டதற்கு சிலர் தாய்நாட்டை விட்டு வெளியில் வசிப்போருக்கு ஒருவித ஏக்கம் ஏற்படுதல் ஒரு காரணம் என்றர். சிலர் இங்கு இணைய அணுக்கக் குறைவைச் சுட்டிக் காட்டினர். நானும் என் பங்கிற்கு புலம்பெயர்ந்த இந்திய மற்றும் இலங்கைத் தமிழர்களின் பங்களிப்பைப் பற்றி பேசினேன்.
மொத்தத்தில் இந்த சந்திப்பு பயனுள்ளதாகவே இருந்தது. -- Sundar \பேச்சு 10:17, 5 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]
நன்றி சுந்தர், படத்தை இணைத்துள்ளேன். விக்கிப்பீடியர்களுக்கு ஆட்சேபனை என்றால் நீக்கிவிடலாம். தமிழ் விக்கிப்பீடியாவை ஜிம்மி வேல்ஸிற்கு விளக்கியதற்கு நன்றி. ஆங்கில் விக்கிப் பீடியாவில் 1000 இற்கும் மேற்பட்ட நிர்வாகிகள் உள்ளனர் தமிழில் 1000 பயனர்களை இன்னமும் அடையவில்லை வெகுவிரைவில் அடைவோம் என்ற நம்பிக்கையுண்டு. நாம் செல்விடும் நேரத்தில் மற்றவர்கள் பயன்படுத்தவேண்டும். அப்போது தான் நாம் நேரத்தைச் சிறந்த வழியில் செலவிடுகின்றோம் எனற மகிழ்ச்சியேற்படும். நான் சில தமிழ் ஊடகங்களுக்கு தமிழ் விக்கிப்பீடியாவை அறிமுகம் செய்யும்படி மின்னஞ்சல் செய்துள்ளேன் பதிலெதுவும் கிடைக்கவில்லை. சாதாரண கடிதத்தை எழுதிப் பார்க்கின்றேன். பல மாதங்கள் முன்னர் இலங்கையில் தமிழ் PC Times விக்கிப்பீடியாவைப் பற்றிக் கட்டுரை எழுதியுருந்தனர். எனினும் எனது கருத்துப் படி இந்தத் திட்டம் பற்றிப் போதுமான விளக்கம் மக்களைச் சேரவில்லை இதை முதலில் எவ்வாறெனினும் சீர்செய்யவேண்டும். ஆலமரத்தடியில் எனது கருத்துக்களைத் தெரிவிக்கின்றேன்--Umapathy 10:41, 5 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]

படிமத்தை PhotoShop மூலம் தெளிவாக்கியுள்ளேன் விருப்பமானால் மாற்றிவிடலாம். Mayooranathan 13:16, 5 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]

http://flickr.com/photos/60162377@N00/258841715/in/set-72157594309532904/ என்ற பக்கத்தில் இப்படிமத்தின் பெரிய அளவுப் பதிப்பு உள்ளது.--ரவி 22:41, 5 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=படிமப்_பேச்சு:Sundar_and_Jimbo.jpg&oldid=202592" இலிருந்து மீள்விக்கப்பட்டது