உள்ளடக்கத்துக்குச் செல்

பசுமை பட்டாசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பசுமை பட்டாசு என்பது அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றத்தின் கீழ் இயங்கும் நீரியின் (NEERI) கண்டுபிடிப்பு ஆகும். நீரி நிறுவனத்தின் பசுமைப் பட்டாசு காண்பதற்கு வழக்கமான பட்டாசு போலவே இருக்கும். பசுமை பட்டாசு வெடிக்கும்போது ஒலி அளவு சிவகாசி பட்டாசை விட குறைவாகவே இருப்பதால் ஒலியை மாசுபடுத்தாது. பசுமை பட்டாசுகள் தயாரிப்பது பற்றிய ஆய்வுகள் சனவரி 2019 முதல் நீரி அமைப்பு துவங்கியது.[1][2]

பசுமை பட்டாசு எவ்வாறு இருக்கும்[தொகு]

 • பசுமை பாட்டாசுகளும், சாதாரண பட்டாசுகளைப் போலவே இருக்கும். ஆனால் வெடிக்கும்போது எழுப்பும் ஒலி மாசு குறைவாக இருக்கும்.
 • சாதாரணமான பட்டாசுகளுடன் ஒப்பிடும்போது பசுமை பட்டாசுகள், 40 முதல் 50% குறைவான நச்சு வாயுவை வெளியிடும்.
 • பசுமை பட்டாசுகள், சாதாரண பட்டாசுகள் வெளியிடுவதை விட சுமார் 40-50% வரை வேதியியல் மாசு குறைவாகவே வெளியிடும். ஆனால், முற்றிலும் பாதுகாப்பானது என்றோ, பாதிப்பே ஏற்படுத்தாதவை என்றோ கூறிவிடமுடியாது.
 • வழக்கமான பட்டாசுகளை வெடிக்கும்போது வெளியேறும் நைட்ரஜன் மற்றும் கந்தக வாயுக்களை எவ்வாறு குறைப்பது குறித்து ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறது நீரி அமைப்பு. .
 • நைட்ரஜன் மற்றும் கந்தக வாயுக்கள் வெளியேறும். பசுமை பட்டாசுகளில் பயன்படுத்தப்படும் ரசாயனப் பொருட்கள் வழக்கமான பட்டாசுகளில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களில் இருந்து மாறுபட்டவை. அதற்கான புதிய ரசாயன சேர்க்கை சூத்திரத்தை 'நீரி' உருவாக்கியுள்ளது.

பசுமை பட்டாசுகளில் வகைகள்[தொகு]

'நீரி' தயாரித்திருக்கும் சூத்திரத்தின்படி தயாரிக்கப்படும் பசுமை பட்டாசுகள், வெடித்த பிறகு நீராக மாறும் என்பதோடு, தீங்கு விளைவிக்கும் வாயுக்கள் அதிலேயே கரைந்துவிடும். பாரம்பரிய பட்டாசுகளில் இருந்து மாறுபட்ட பசுமை பட்டாசுகளை 'நீரி' நான்கு வைகைகளில் தயாரித்துள்ளது

 1. தண்ணீரை உருவாக்கும் பட்டாசுகள்: இந்த வகை பசுமை பட்டாசுகள் வெடித்த பிறகு கரியாக மாறாமல் நீர்த்துளிகளாக உருமாறிவிடும். அதில் சல்ஃபர் மற்றும் நைட்ரஜன் வாயுக்கள் கரைந்துவிடும். இந்த வகை பட்டாசுக்கு 'வாட்டர் ரிலீசர்' என்று 'நீரி' பெயரிட்டுள்ளது. மாசை குறைக்கும் முக்கியமான காரணியாக தண்ணீர் கருதப்படுகிறது.
 2. கந்தக மற்றும் நைட்ரஜன் வாயுக்களை குறைவாக வெளியிடுகிறவை: இந்த வகை பசுமை பட்டாசுகளுக்கு STAR பசுமை பட்டாசு என்று'நீரி' பெயரிட்டுள்ளது. அதாவது Safe thermite cracker என்பதன் சுருக்கமாக STAR என்ற பெயர் வழங்கப்பட்டுள்ளது. இந்த வகை பட்டாசில், ஆக்சிஜனேற்றம் செய்யும் திறன் கொண்ட பொருட்கள் (Oxidizing Agent) பயன்படுத்தப்படுகிறது. இந்த வகை பசுமை பட்டாசுகளை வெடிக்கும்போது, கந்தகம் மற்றும் நைட்ரஜன் குறைந்த அளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதற்கு சிறப்பு வகை வேதிப் பொருள் பயன்படுத்தப்படுகிறது
 3. அலுமினியம் குறைவாக பயன்படுத்தப்படுகிறவை: சாதாரண பட்டாசுகளுடன் ஒப்பிடும்போது இந்த வகை பட்டாசில் 50 முதல் 60 சதவிகிதத்திற்கும் குறைவான அலுமினியம் பயன்படுத்தப்படுகிறது. எனவே இதற்கு SAFAL (Safe Minimal Aluminum) என்ற பெயரிடப்பட்டுள்ளது.
 4. அரோமா பட்டாசு: இந்த வகை பட்டாசுகளை வெடிக்கும்போது தீங்கு விளைவிக்கும் வாயுக்கள் குறைவாக வெளியாவதோடு, நறுமணமும் வெளியாகும்.

மேற்கோள்கள்[தொகு]

 1. 'பசுமை பட்டாசு' என்றால் என்ன? அது எங்கே கிடைக்கும்?
 2. "பசுமை பட்டாசுன்னா என்னன்னு தெரிஞ்சுக்கிட்டீங்களா இல்லையா?a". Archived from the original on 2019-10-26. பார்க்கப்பட்ட நாள் 2019-10-26.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பசுமை_பட்டாசு&oldid=3561474" இலிருந்து மீள்விக்கப்பட்டது