பசிலெயசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செலுகிட் மரபுவழி மன்னர் ஆன்டியோசுசு I சோடெரின் வெள்ளிக் காசு. காசின் பின்புறத்தில் புனிதப்பீடத்தில் அப்பல்லோ அமர்ந்திருப்பதை காட்டுகிறது. கிரேக்க மொழியில் ΒΑΣΙΛΕΩΣ ΑΝΤΙΟΧΟΥ (மன்னர் ஆன்டியோசுசினுடையது) எனப் பொறிக்கப்பட்டுள்ளது.

பசிலெயசு (Basileus, கிரேக்க மொழி: βασιλεύς (பைசாந்திய, தற்கால கிரேக்க உச்சரிப்பு), பன்மை βασιλεῖς, basileis/பசிலெயிசு) என்ற கிரேக்கச் சொல் வரலாற்றில் பல்வேறு மன்னர்களுக்கான பட்டமாக இருந்துள்ளது. ஆங்கிலத்தில் இது பைசாந்தியப் பேரரசர்கள் பயன்படுத்திய பட்டமாக அறியப்பட்டாலும் வரலாற்றில் இது பண்டைக் கிரேக்கத்தில் இறைமையும் அதிகாரமும் உள்ள நபர்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது; தற்கால கிரேக்க மன்னர்களுக்கும் இப்பட்டம் இருந்துள்ளது.

இதன் பெண்பாற் பெயராக பசிலிசா, பசிலெயா, பசிலெசு மற்றும் வழக்கொழிந்த பசிலின்னா என்பன உள்ளன.[1]

குறிப்புகள்[தொகு]

உசாத்துணைகள்[தொகு]

  • Jochem Schindler, "On the Greek type hippeús" in Studies Palmer ed. Meid (1976), 349–352.
  • Robert Drews, Basileus. The Evidence for Kingship in Geometric Greece, Yale (1983).
  • The Oxford Dictionary of Byzantium, Oxford University Press (1991).
"https://ta.wikipedia.org/w/index.php?title=பசிலெயசு&oldid=2492978" இலிருந்து மீள்விக்கப்பட்டது