பசவராச் பாட்டீல் அன்வாரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பசவராச் பாட்டீல் அன்வாரி (Basavaraj Patil Anwari) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வதியாவார்.[1] 1943 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். 1990 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21 ஆம் தேதி முதல் 1991 ஆம் ஆண்டு பிப்ரவரி 20 வரை சந்திர சேகர் அரசாங்கத்தில் எஃகு மற்றும் சுரங்கத் துறை அமைச்சராகப் பணியாற்றினார்.[2][3][4] பசவராச் பாட்டீல் அன்வாரி 9ஆவது மக்களவையிலும், 10ஆவது மக்களவையிலும் கொப்பள் தொகுதியிப் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார். ஒன்பதாம் வகுப்புவரை படித்த இவர் ஒரு விவசாயி ஆவார்.

சிறப்பு[தொகு]

அன்வாரி 1989 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் கொப்பள் மக்களவைத் தொகுதியில் சனதா தளம் கட்சி சார்பில் போட்டியிட்டு 49.31% வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.[5] 1991 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில், இவர் சனதா தளத்தின் சித்தராமையாவுக்கு எதிராக இந்திய தேசிய காங்கிரசு சார்பில் போட்டியிட்டு 44% வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Members Bioprofile - ANWARI, SHRI BASAVARAJ PATIL". loksabha.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2023-03-14.
  2. "No.55/1/1/90-Cab" (PDF). Cabinet Secretriat (Government of India). 21 November 1990. Archived (PDF) from the original on 2021-09-25.
  3. "The Indian Express - Google News Archive Search". news.google.com. 22 November 1990. பார்க்கப்பட்ட நாள் 14 March 2023.
  4. "Cabinet Secretariat 21 February 1991" (PDF). Cabinet Secretariat. 21 February 1991. பார்க்கப்பட்ட நாள் 14 March 2023.
  5. "General Election, 1989 (Vol I, II)". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 14 March 2023.
  6. "General Election, 1991 (Vol I, II)". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 14 March 2023.