பங்கர் ராய்
பங்கர் ராய் | |
---|---|
![]() டைம் பத்திரிகை நிகழ்வில் பங்கர் ராய் | |
பிறப்பு | மேற்கு வங்காளம் |
தேசியம் | இந்தியா |
பணி | சமூக சேவையாளர் & பேர்பூட் கல்லூரி நிறுவனர் |
பங்கர் ராய் (Bunker Roy) இவர் இந்தியாவைச் சேர்ந்தவர். சமூக ஆர்வலர், சமூக சேவையாளர். பேர்பூட் கல்லூரியின் நிறுவனர் ஆவார். டைம் பத்திரிகை 2010 ஆம் ஆண்டின் செல்வாக்கான 100 பேரில் ஒருவர் என இவரது கல்விச் சேவைக்காக தேர்ந்தெடுத்திருந்தது..[1]
இளமைக் காலம்[தொகு]
இவர் தி டூன் பள்ளியில் (The Doon School) 1956 முதல் 1962 வரை கல்வி கற்றார். 1962 முதல் 1967 வரை தில்லி செயிண்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரியில் பயின்றார்.[2] ஸ்குவாஷ் விளையாட்டில் 1964-ல் தேசிய அளவில் இரண்டாமிடம் பெற்றார்.[3] உலகச் சாம்பியன் ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவைப் பிரதிநிதித்து மூன்று முறை கலந்து கொண்டார்.[2][4]
பேர்பூட் கல்லூரி[தொகு]
இவர் பேர்பூட் கல்லூரியைத் தொடங்கினார்.[5] வறட்சியால் பாதிக்கப்பட்ட 100 இடங்களைப் பார்வையிட்டு அது தொடர்பாக 1972-ல் ஆராய்ச்சி மையம் ஒன்றை நிறுவினார்.[5] இக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் நோக்கம் கிராமப்புறங்களின் தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்வதும், மக்களுக்கு மருத்துவம் மற்றும் சூரிய மின் சக்தி தொடர்பாய் பயிற்சி அளிப்பதும் ஆகும்.[5] இவரது கல்லூரியில் இது வரை 30,00,000 பேர் சூரிய சக்தி பொறியாளராகவும், தையல் கலை வல்லுனராகவும், ஆசிரியர்களாகவும், கட்டிட வடிவமைப்பாளர்களாகவும் மற்றும் மருத்துவராகவும் பயிற்சி பெற்றுள்ளனர்.[5]
பிற பணிகள்[தொகு]
- இந்திய நடுவண் அரசு இவரை ராஜீவ் காந்தி திட்டக் குழுவில் இடம் பெறச் செய்தது.
- டெட் (TED) கலந்துரையாடலில் இவர் பங்கு பெற்றுள்ளார்.[6]
விருதுகள்[தொகு]
- ஜம்னலால் பஜாஜ் விருது (Jamnalal Bajaj Award )
- சுற்றுச் சூழலுக்கான புனித ஆண்ட்ரூ விருது (St Andrews Prize for the Environment)
- றாபர்ட் ஹில் விருது (Robert Hill Award)
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Mortenson, Greg. (2010-04-29) Sanjit 'Bunker' Roy The 2010 TIME 100 பரணிடப்பட்டது 2013-08-17 at the வந்தவழி இயந்திரம். TIME. Retrieved on 2012-06-02.
- ↑ 2.0 2.1 bunker Roy (2006-02-01). Verghese, B. G.. ed. Tomorrow's India: Another Tryst with Destiny. Penguin Books India. பக். 347–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780670058631. http://books.google.com/books?id=JRTBJNRntlcC&pg=PA347. பார்த்த நாள்: 23 November 2012.
- ↑ TY - BOOK T1 - Youth A1 - India. Ministry of Education IS - v. 8-11 Page 16 SN - 0513-3289 UR - http://books.google.com/books?id=tC1qqQd6l5wC Y1 - 1964 PB - Ministry of Education of India.
- ↑ Elkington, John; Hartigan, Pamela (2008-02-01). The Power of Unreasonable People: How Social Entrepreneurs Create Markets That Change the World. Harvard Business Press. பக். 52–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781422104064. http://books.google.com/books?id=sgvbNQY_IFIC&pg=PT52. பார்த்த நாள்: 23 November 2012.
- ↑ 5.0 5.1 5.2 5.3 John, Mary (2003). Children's Rights and Power: Charging Up for a New Century. Jessica Kingsley Publishers. பக். 232–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781853026584. http://books.google.com/books?id=95aHsTYl-0sC&pg=PA232. பார்த்த நாள்: 23 November 2012.
- ↑ TNN (Oct 28, 2012). "'Students untapped forces of social change'". Times of India இம் மூலத்தில் இருந்து 2013-01-03 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130103203624/http://articles.timesofindia.indiatimes.com/2012-10-28/jaipur/34779858_1_tedx-ideas-school-kids. பார்த்த நாள்: 23 November 2012.