பகுப்பு பேச்சு:பயணியர் தண்டவாள ஊர்திகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

@Srinivasa247: பயணியர் தண்டவாள ஊர்தி என்றால் என்ன? ஆங்கிலத்தில் எவ்வாறு இதனை அழைப்பர். ஆங்கில விக்கியில் இதற்கு இணையான பகுப்பு உள்ளதா? அவ்வாறு இருந்தால், விக்கித் தரவில் அதற்கான இணைப்பை வழங்குவீர்களா? பகுப்பில் ஊர்தி என்று உள்ளது. அப்படியானால் ஒரு ஊர்தி மட்டும் தான் இப்பகுப்பில் இருக்குமா? பயணியர் தண்டவாள ஊர்தி பல இருந்தால் பகுப்பின் பெயர் பயணியர் தண்டவாள ஊர்திகள் எனப் பன்மையில் இருக்க வேண்டும். ஒரே ஒரு ஊர்திக்குப் பிறிம்பான பகுப்பு தேவையில்லை. பயணியர் என்பது ஏன் பயணிகள் என இருக்கக்கூடாது?--Kanags \உரையாடுக 11:14, 13 சனவரி 2016 (UTC)[பதிலளி]

@Kanags: தண்டவாளத்தில் ஓடும் அத்தனை வாகனங்களும் (எ.கா.உந்துப்பொறி, பெட்டிகள், உணவகைப் பெட்டி) தண்டவாள ஊர்திகள் என குறிப்பிடலாம் அல்லவா! இதற்கான ஆங்கில விக்கியின் இணையான பகுப்பு உள்ளது. இதன் இணைப்பு கீழே உள்ளது. பகுப்பு: https://en.wikipedia.org/wiki/Category:Rolling_stock பக்கம்: https://en.wikipedia.org/wiki/Rolling_stock

மேலும் பன்மையில் குறிப்பிடாதது எமது பிழையாகும். ஆங்கில விக்கியில் பகுப்புகள் பன்மையில் இல்லை.ஆகவேதான் இப்பிழை நேர்ந்தது. அதற்கு நன் மன்னிப்பு கோருகிறேன். நீங்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அதே பெயரில் ஒரு பகுப்பை பன்மையில் உருவாக்கியுள்ளேன். அப்பகுப்பில் மேலும் சில துணை பகுப்புகளை இணைக்க உள்ளேன். -- User:Srinivasa247

@Srinivasa247: சரி, நான் கேட்ட ஏனைய சில கேள்விகளுக்குப் பதில் சொல்லவில்லை. (பயணியர், பயணிகள்). மேலும், நீங்கள் உருவாக்கும் பகுப்புகள் அனைத்தும் ஆங்கில விக்கியில் இருந்தே மொழிபெயர்க்கிறீர்கள் போல் தெரிகிறது. அப்படியானால், அவற்றுக்கு ஏன் நீங்கள் இணைப்புகள் கொடுக்கக்கூடாது?--Kanags \உரையாடுக 11:40, 13 சனவரி 2016 (UTC)[பதிலளி]
@Kanags: பயணியர் என்பது ஒருமை, பயணிகள் என்பது பன்மை. பயணிகள் தண்டவாள ஊர்தி என்றும் குறிப்பிடலாம். அதில் எனக்கு ஆட்சேபனை ஏதுமில்லை.
ஆங்கிலத்தில் இருந்து மொழிபெயர்க்கப்பட்ட பக்கங்களில், ஆங்கில விக்கியுடனான இணைப்பை "மற்ற மொழிகளில்" (இடது பக்க கீற்றில் உள்ளது) என்ற தலைப்புக்கு கிழே (ஆங்கிலம் மட்டுமல்லாது பிற மொழிகளின் இணைப்புகளையும்) கொடுத்துள்ளேன்.
இதைத் தவிர்த்து வேறு இடத்திலும் இணைப்புகள் கொடுக்க வேண்டுமானால், எங்கு கொடுக்கவேண்டும் என்று தயவுசெய்து தெரிவியுங்கள். நன்றி!---User:Srinivasa247 .
@Srinivasa247: கட்டுரைகளுக்கு எவ்வாறு இணைப்புகள் முக்கியமோ அதுபோன்றே பகுப்புகளும். நீங்கள் உருவாக்கிய எந்தப் பகுப்புகளும் இதுவரையில் ஆங்கில விக்கிப் பகுப்புகளுக்கு இணைக்கப்படவில்லை. ஒன்றிரண்டை நான் இணைத்திருக்கிறேன். ஆனால் நீங்கள் உருவாக்கிய சில கலைச்சொற்களுக்கு என்னால் சரியான ஆங்கிலப் பக்கங்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்தப் பகுப்புக்கூட இணைப்பில்லாமல் உள்ளது. எனவே அனைத்தையும் அருள்கூர்ந்து இணைத்து விடுங்கள்.--Kanags \உரையாடுக 20:01, 13 சனவரி 2016 (UTC)[பதிலளி]

எம்மை தெளிவு படுத்தியதற்க்கு நன்றி, :@Kanags:. நான் பக்கங்களுக்கு மட்டும் தான் ஆங்கில இணைப்பு உள்ளது என்று நினைத்தேன். பகுப்புகளுக்கும் ஆங்கில இணைப்பு இருப்பது எமக்கு தெரியாது. எனக்கு எடுத்துரைத்ததற்கு மிக்க நன்றி. நான் உருவாக்கிய அணித்து பகுப்புகளுக்கும் ஆங்கில இணைப்பை தருகிறேன். இனிவரும் என் பங்களிப்புகளில் இதை மனதில் வைத்துக் கொள்வேன். மேலும் நான் ஏதேனும் இதுபோன்று அறியாப்பிழை செய்கிறேன் என்று உங்களுக்கு தோன்றினால், உங்கள் பரிந்துரைகளை தயங்காமல் என்னிடம் தெரிவியுங்கள். நன்றி! ----User:Srinivasa247 .