பகுப்பு பேச்சு:தமிழ் மொழிபெயர்ப்பியல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


  • விருதுகள்


அமைப்புகள்[தொகு]

குறிப்புகள்[தொகு]

"தமிழின் முதன்மையான மொழிபெயர்ப்பாளர்களான டி.எஸ்.சொக்கலிங்கம், க.சந்தானம், த.நா.குமாரசாமி,த.நா.சேனாபதி, அ.கி.ஜெயராமன், அ.கி.கோபாலன், ஆர்.ஷண்முகசுந்தரம் ஆகியோர் முதல்தலைமுறையைச் சேர்ந்தவர்கள் எனலாம். துளசி ஜெயராமன் ,சரஸ்வதி ராம்நாத், சௌரி, சித்தலிங்கையா, சி.ஏ.பாலன் ,ஹேமா ஆனந்ததீர்த்தன், இளம்பாரதி, குப்புசாமி கணேசன் போன்றவர்கள் இரண்டாவது தலைமுறை. சு.கிருஷ்ணமூர்த்தி இந்த இரண்டாவது தலைமுறையில் முக்கியமானவர். மு.கு.ஜகன்னாதராஜாவை இவ்வரிசையில் புனைவல்லாத நூல்களை மொழியாக்கம் செய்தவர்களில் முக்கியமானவர் என்று சொல்லமுடியும்" [6]

உசாத்துணைகள் & குறிப்புகள்[தொகு]

கல்வி வளங்கள்[தொகு]

இடதுசாரித் தமிழ் மொழிபெயர்ப்புக்கள்[தொகு]

இடதுசாரி கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட தமிழர்களினாலும், அக் கொள்ளைகளை முன்னிறுத்திய சோவியத், சீன அரசுகளாலும் பல அரசியல், பொருளியல், சமூகவியல் நூல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டன. [7] [8]

  • நூல் அமைப்பில்
  • நூல் உள்ளடக்கத்தில்
  • விற்பனையில்


"இன்று நவீன தமிழ் இலக்கியம் செழித்துப் பல்வேறு கிளைகளாக வளர்ந்து நிற்பதற்கு சோவியத் இலக்கிய மொழி பெயர்ப்புகள், நியூ நெஞ்சுரி புத்தக நிறுவனத்தால் ஊர்தோறும் இங்கே பரவலாகச் சென்று அடைந்தது ஒரு முக்கிய காரணம் என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள்." [9]

  • ராதுகா பதிப்பகம் - காமிக்ஸ், சோவியத் நாட்டுக் கதைகள்
  • மாஸ்கோ பதிப்பகம் [10]
  • முன்னேற்ற பதிப்பகம் - [11]
  • விடியல் பதிப்பகம்
  • சீன அயல்மொழிப் பதிப்பகம் - [12] en:Foreign Languages Press

"உள்ளே உள்ள நூல்களை கையில் எடுத்து பார்க்கவே பரவசமாக இருந்தது. வழவழப்பான காகிதத்தில் துல்லியமான அச்சு. கெட்டியான அட்டை மீது அழகிய ஓவியங்களும் புகைப்படங்களும் . முற்றிலும் கேள்விப்படாத பெயர்கள். இவான் துர்கனேவ், பியோத்தர் தஸ்தயேவ்ஸ்கி, லெவ் தல்ஸ்தோய், மக்ஸீம் கோர்க்கிய்….. ஒரு முற்றிய கோழி ஒரு ரூபாய்க்கு விற்கும் சின்னஞ்சிறு கிராமத்தில் உலக இலக்கியம் தன் மாட்சிமையுடன் வந்திறங்கியிருந்தது!" [13]