மருத்துவர் நா.மகாலிங்கம் மொழி பெயர்ப்பு மையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மருத்துவர் நா.மகாலிங்கம் மொழி பெயர்ப்பு மையம் என்பது ""பல்வேறு மொழிகளின் இலக்கியங்கள், தத்துவங்கள், அறிவியல், வாழ்க்கை வரலாறு, செவ்வியல் படைப்புகள், இளைய தலைமுறைக்கான பயன்பாட்டு நூல்கள் ஆகியவற்றைத் தமிழில் மொழி பெயர்ப்பதை" நோக்கமாகக்கொண்ட ஒரு அமைப்பு.[1] இது தமிழில் மொழிபெயர்த்து நூல்களை வெளியிட வேண்டும் என்று ஆர்வமாக இருந்த மருத்துவர் நா.மகாலிங்கம் நினைவாக, மகாலிங்கம் அறக்கட்டளையினால் நிறுவப்பட்டது. இந்த அமைப்பின் தலைவர் ம. மாணிக்கம் ஆவார். இது எட்டுத் தமிழறிஞர்களைக் கொண்ட ஒரு ஆலோசனைக் குழுவைக் கொண்டுள்ளது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. மொழிபெயர்ப்பின் மூலம் தமிழை வளமாக்க வேண்டும்: ம.மாணிக்கம் பேச்சு
  2. டாக்டர் நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம் சார்பில் அக்டோபரில் 6 புத்தகங்கள் வெளியீடு [தொடர்பிழந்த இணைப்பு]