பகுப்பு பேச்சு:கட்டற்ற மற்றும் திறமூல மென்பொருள்கள்
திறந்த மூல, திறமூல, தளையறு
[தொகு]Do the terms திறந்த மூல மென்பொருள் (திறமூல மென்பொருள்) (Open Source Software), and தளையறு மென்பொருள் (Free Software) refer to the same thing, or are theere any fundamental differences (ex: legal, licence, approach etc)?
தளையறு/திறந்த மூல மென்பொருள் என்று ஒருங்கே குறிக்கலாமா?
--Natkeeran 15:34, 4 ஏப்ரல் 2006 (UTC)
அதிசயமாக இருக்கிறது, சற்று முன்னர்தான் இதுபற்றி உங்களுக்கு தனிப்பட எழுத இருந்தேன். GNU இயக்க தூய்மையாளர்கள் தளையறு மற்றும் திறந்த ஆணைமூல மென்பொருட்கள் (FOSS) என்று குறிப்பிடுவதையே விரும்புகிறார்கள். பொதுமக்கள் உரிமப்படி அப்படித்தான் சொல்ல வேண்டும். slashdot தளம் வெறுமனே opensource என்று பயன்படுத்துவது இப்பொழுது சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது.
நீங்கள் திறந்த ஆணைமூலம் என்பதை திறந்த மூலம் என்று பயன்படுத்துகிறீர்கள். இது நல்ல பிரயோகம் போல் படுகிறது. திறந்த ஆணி மூலம் எனும்போது அது மென்பொருட்களை மட்டுமே குறிக்கும். இருய் வியாபகமான தத்துவம் சார்ந்த சொல்லாக இருப்பதால் திறந்த மூலம் என்று பயன்படுத்துவதே பொருத்தமானதாக தோன்றுகிறது.
தளையறு மற்றும் திறந்த மூல மென்பொருட்கள் என நாம் பயன்படுத்தலாம் என்பது எனது கருத்து. பார்க்க: http://www.gnu.org/ http://www.fsf.org/
--மு.மயூரன் 20:08, 12 ஏப்ரல் 2006 (UTC)
தமிழ் விக்கிபீடியாவில் தற்போது திறந்த மூல மென்பொருள் என்றும் தளையறு மென்பொருள் என்றும் இரு பகுப்புக்கள் இருக்கின்றன. உங்கள் பரிந்துரை நன்று என்றாலும் சற்று நீண்டுவிட்டது போல தெரிகின்றது. இதை சுருக்கமாகவும், அழகாகவும் சொல்ல குறிக்க ஒரு நல்ல சொல் தேடவேண்டும். மேலும், திறந்த மூலத்தை திறமூலம் என்று சுருக்குவது அவ்வளவு சரியல்ல என்று நினைக்கின்றேன். நீங்கள் என்ன நினக்கின்றீர்கள்?
திறந்த மூலம் என்று தமிழில் சொல்லும் பொழுது ஆங்கில சொற்களில் எழும் தத்துவ பிரச்சினைகள் எழுவதில்லை என்றே தெரிகின்றது.
சுதந்திர செயலிகள், சுதந்திர மென்பொருள்கள், பகிர்வறை, பரிவறை, கட்டற்ற போன்று மேலும் பல சொல்லாடல்களும் இருக்கின்றன.
தளையறு என்ற சொல் எனக்கு சற்று பரிச்சியம் இல்லாதாலோ தெரியவில்லை, அதனால் கட்டற்ற சற்று நன்று போன்று தெரிகின்றது.
பொதுவாக பொது வழக்கோடு ஒத்துபோகவே விரும்புகின்றேன். ஆனால், எது பொது வழக்கு என்று தமிழில் கண்டுபிடிப்பதே ஒரு தொழிலாகிவிட்டது...
தமிழில் தத்துவ ரீதியில் திறந்த மூலம் என்பதை கட்டற்ற என்பதோடு இணைத்தே நான் சில வேளைகளில் பார்பதுண்டு, ஆனால் நாம் ஆங்கில எண்ண உலகில் இருந்து பல தத்துவங்களை இங்கு தத்தெடுப்பதால் இரு வேறு சொற்களை பிரயோகிப்பதே நன்று என்றும் தோன்றுகின்றது.
திறந்த மூலம் என்ற கோட்பாடு பல செயல்பாடுகளுக்கு ஏற்ற ஒரு அணுகுமுறையா என பல பரிசோதனைகள் தற்சமயம் மேற்கொள்ளப்படுகின்றன. தற் சமயம் இந்த அணுகுமுறை பட்டை தீட்டப்பட்டு வருகின்றதெனலாம்.
--Natkeeran 20:27, 12 ஏப்ரல் 2006 (UTC)
கட்டற்ற என்ற சொல் பொருத்தமானதாகத்தான் இருக்கிறது. கட்டற்ற திறந்த மூல மென்பொருள் என்று பயன்படுத்தலாம் அழகாக. இதை ஒரு முறை பொதுவில் அறிவித்து கலந்துரையாடிவிட்டு செய்வோம். வலைப்பதிவை பயன்படுத்தலாம். அங்கே வெங்கட் போன்றவர்கள் ஆலோசனை சொல்ல வாய்ப்பு உள்ளது.அத்தோடு இப்போது எமக்கு மிக மிக அவசியமாக தேவைப்படும் ஒன்றாக நான் திறந்த கலைச்சொல் அகரமுதலியையே சொவேன். இது பற்றி ஏற்கனவே உங்களுடன் உரையாடியிருக்கிறேன். ஆங்கில விக்கிபீடியாவில் கலைச்சொல் அகரமுதலிகள் உண்டு. அவர்கள் செய்திருப்பதைப்போன்றோ அல்லது வேறு விதமாகவோ நாம் இதனை செய்யலாம். மிக மிக அவசரமாக திறந்த கலைச்சொல் அகரமுதலி தேவைப்படுவதை உணர்கிறேன். இதற்கு என்ன செய்யலாம்?
விக்கி பீடியாவை பயன்படுத்தலாமா? ஆல்லது விக்கி புத்தகம் ஒன்றினை செய்யலாமா?
--மு.மயூரன் 20:48, 12 ஏப்ரல் 2006 (UTC)
விக்சனரி http://ta.wiktionary.org/wiki இதை நீங்கள் அறியாமல் இருக்க முடியாதே?
--Natkeeran 21:00, 12 ஏப்ரல் 2006 (UTC)
ம்ம்ம்.. ஏற்கனவே அறிந்தது தான் ஆனால் கலைச்சொல் அகரமுதலியாக அதனை பயன்படுத்தும் சாத்தியம் பற்றி தெரியாமலிருந்தது. விக்கிசனரியை ஒருமுறை பார்வையிட்டுவிட்டு சொல்கிறேன். --மு.மயூரன் 21:11, 12 ஏப்ரல் 2006 (UTC)
மயூரன், தமிழ் விக்கிபீடியாவில் எண்னக்கரு பட்டியல், கலைச்சொ பட்டியல், நுட்பியல்சொல் பட்டியல் தாயரிப்பது வழமை. தேவைக்கேற்ப, வளர்ச்சிக்கேற்ப, ஈட்பாடுகளை பொறுத்து இது நடைபெறுகின்றது. பல பகுப்புக்களில் இப்படியல்களை நீங்கள் காணலாம்.
--Natkeeran 21:19, 12 ஏப்ரல் 2006 (UTC)
- வேறெந்த விக்கித் திட்டத்தையும் விட, கலைச்சொல் அகரமுதலிக்குப் பொருத்தமான இடம் விக்சனரிதான். விக்சனரியின் தொடக்க காலத்திலிருந்தே அங்கே ஒரு கலைச்சொல் அகரமுதலிக்கான விதை உள்ளது. கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்கு முன்னர் யாஹூ மடற்குழு ஒன்றில் இது பற்றி எடுத்துக்கூறி அதை வளர்க்க வேண்டியதன் முக்கியத்துவம் பற்றி எடுத்துக் கூறியிருந்தேன். பலரும் இதற்கு ஆதரவாகக் கருத்து வெளியிட்டிருந்தபோதும்,என்னிடமிருந்து இதற்கான ஒரு திட்டத்தை எதிர்பார்த்தார்கள் போல் தெரிகிறது. நானும் விக்கிபீடியாவில் கூடிய நேரத்தைச் செலவு செய்தபடியால் இதுபற்றி அதிகம் கவனம் செலுத்தவில்லை. எனவே அது அதிகம் வளராமல் அப்படியே உள்ளது. இதை நிச்சயம் வளர்த்தெடுக்கமுடியும். இது மிகவும் அவசியமானதும் கூட. இது விக்கிபீடியாவுக்கும், அதன் பங்களிப்பாளர்களுக்கும் மிகவும் உதவியாகவும் அமையும். யாரும் அணுகிப் பயன்படுத்தக்கூடியதாக இப்பொழுது உள்ள சிறப்பான கலைச்சொல் தொகுதி, தமிழ் இணையப் பல்கலைக்கழகத் தளத்தில் உள்ளதுதான். அதிலும் சில குறைபாடுகள் உள்ளன. முக்கியமாக, இதிலேயுள்ள பட்டியல்கள் பழையவை. புதிய சொற்கள் பல அதில் இல்லை. அத்துடன் இது பயன்படுத்துவதற்குச் சற்றுச் சிரமமானது (not user friendly). புதிய சொற்களை உடனுக்குடன் சேர்ப்பது போன்றவற்றுக்கு விக்சனரி மிகவும் வசதியானது. அத்துடன் குறிப்பிட்ட கலைச்சொற்கள் பற்றிய கலந்துரையாடல்களும் விக்சனரியில் இடம்பெறமுடியுமாதலால், அது விக்சனரிக்கு ஒரு மேலதிக பெறுமதியை வழங்கும். பல கலைச்சொல் அகரமுதலிகளைப் போல் இலங்கை, இந்தியா என்று குறிப்பிட்ட வட்டத்துக்குள் நிற்காமல், ஒரு உண்மையான தமிழ் உலகம் தழுவியமுறையில் விக்சனரியை வளர்த்தெடுப்பது இலகு.
- கட்டற்ற, திறந்த மூலம் ஆகிய கருத்துருக்கள் அடிப்படையில் வேறானவை என்றுதான் நான் நினைக்கிறேன். கட்டற்ற என்பது எதுவித கட்டுப்பாடுமின்றிப் பயன்படுத்தக்கூடிய என்ற பொருளிலேயே பயன்படுத்தப்படுகின்றது. இது நூல்கள், ஓவியம், வடிவமைப்பு என்று எல்லாவற்றுக்கும் பொருந்தக்கூடியது. திறந்தமூலம் என்பது பொதுவாக கணினித் துறைக்கு மட்டுப்படுத்தப்பட்டது போல் தெரிகிறது.
--Mayooranathan 11:58, 13 ஏப்ரல் 2006 (UTC)
Free Software and Open Source by Venkat
[தொகு]சமீபகாலத்தில் பலரும் பரிவூற்று, திறவூற்று போன்ற சொற்களை Free Software, Open Source இவற்றைக்குறிக்கப் பயன்படுத்தி வருகிறார்கள். ரிச்சர்ட் ஸ்டால்மான் (Free Software), மற்றும் எரிக் ரேமண்ட் (Eric Reymond) இவர்களின் வரையறைகளைப்படித்தவர்களுக்கு இந்த மொழியாக்கங்கள் சரியில்லை என்பது எளிதில் தெரியும்.
தளையறு மென்கலன், திறந்த ஆணைமூலம் இரண்டு வார்த்தைகளும் என்னால் உருவாக்கப்பட்டவை. நான் கடந்த ஐந்து வருடங்களாக என்னுடைய கட்டுரைகள், தொழில்நுட்ப விளக்கங்கள், பயனுதவிக் கட்டுரைகள் எல்லாவற்றிலும் இவற்றைத்தான் நான் பயன்படுத்தி வருகிறேன். பரிவூற்று, திறவூற்று போன்ற வார்த்தைகளில் எனக்கு நம்பிக்கை இல்லை. வலைப்பூக்களைப் போல கவித்துவம்தான் மிஞ்சி நிற்கிறது. தொழில்நுட்பப் பயன் நேரடியாக இல்லை. காரணம்,
Source என்பதை ஊற்று என்று கொண்டால், Source Code Error - என்பதை எப்படி மொழியாக்கம் செய்வது? ஊற்றுப்பிழை?? Source debugging?? Code point?? இப்படியாகப் பல குழப்பங்கள் வரும். தமிழில் செய்யப்பட்ட நல்ல மொழியாக்கத்தின் உதாரணம் ware - கலன்
hardware, software, shareware - முறையே வன்கலன், மென்கலன், பகிர்கலன், என்று அழகாக நீட்டிக்கிறது. இதே போல disk=வட்டு
harddisk, floppydisk, compace disc, minidisc, magnotooptic disk - முறையே கடினவட்டு, நெகிழ்வட்டு, குறுவட்டு, நுண்வட்டு, காந்தஒளிவட்டு, என்று அழகாக நீட்டிக்கும். இப்படித்தான் ஆதாரச் சொற்களைப் பார்க்கவேண்டும். Source code என்பதில் இருக்கும் இரண்டு வார்த்தைகளும் இப்படி ஆதார வார்த்தைகள், இவற்றைக் கொண்டு பல சொற்களை உருவாக்க முடியும். Source - மூலம், இங்கே ஆணைமூலத்தைக் குறிக்கிறது, Open - திறந்த, எனவே திறந்த ஆணைமூலம் என்று தொடுத்தேன். முதலில் இதைத் திறவாணைமூலம் என்றுதான் எழுத நினைத்தேன். பிறகு அதன் பொருள் Command to open, திறப்பதற்காகக் கொடுக்கப்படும் ஆணைமூலம் என்ற குழப்பத்திற்கு இடமிருப்பதால் திறந்த ஆணைமூலம் என்று எழுதினேன். இதை வைத்துக் கொண்டு எளிதாக நீட்டிக்க முடியும். Source code error - ஆணைமூலப் பிழை, (இது புழகத்தில் மூலப்பிழையாக மாறிச் சுருங்க முடியும்). Source debugging - மூலப் பிழைநீக்கம், இதை ஊற்றுப்பிழை நீக்கம் என்று சொல்வது பொருத்தமல்ல. Code point - ஆணை இடம்.... ஊற்று என்று கொண்டால் பல சிக்கல்கள் வரும். தொழில்நுட்ப ரீதியாக ஆணைமூலம் என்பதுதான் பொருத்தமாகப்படுகிறது.
திறந்த குழுமங்கள், திறந்த தரங்கள் என்பவை, திறந்த ஆணைமூலத்தின் 'திறந்த' - என்பதும் கொள்கை ரீதியாக ஒரே கருத்தைத்தான் சொல்கின்றன. இதில் இராம.கி ஐயா சொல்வதைப்போல் எந்தக் குழப்பமும் இல்லை.
இதை திறந்த நிரல் என்று சொல்வது கூடத்தவறுதான். திறந்த நிரல் என்பது - Open Program என்றுதான் ஆகும். தொழில்நுட்பத்தில் Source, Program, Software இவை எல்லாவற்றுக்கும் வெவ்வேறு பொருள்கள் உண்டு. ஒன்றுடன் ஒன்றைக்குழப்பமுடியாது.
திறந்த ஆணைமூலம் என்பதைச் சுருக்கமாக திறமூலம் என்று சொல்லலாம். திற என்பது வினைத்தொகையாக வருகிறது. ஆணைமூலம் என்று ஒவ்வொருமுறையும் நீட்டிமுழக்கிக்கொண்டிருக்க அவசியம் இல்லை. இங்கே மூலம் என்றாலே ஆணைமூலம்தான் என்று பொருள்படும்.
- * *
Free software - இதற்கு விடுதலைச் செயலிகள் (முழுப்பிழை), சுதந்திரச் செயலிகள் (இன்னும் பிழை) என்று பலர் எழுதுவதற்கு முன்பே நான் இதற்குத் தளையறு மென்கலன் என்று பெயர் முன் வைத்தேன். Free - தளையறு (இந்த இடத்தில் இலவசம் என்பது பொருளில்லை), அதாவது மென்கலனுக்கு எந்தவிதமானக் கட்டுப்பாடும் இல்லை. இது எழுதி வெளியிடும்போதே தளையற்று (தளையறுத்த) மென்கலன், இப்பொழுது தளையற்றுக் கிடைப்பது, எப்பொழுதும் தளையற்று இருக்கும் என்று வினைத்தொகையாக நிற்கும். இது Software = மென்கலன் என்பதன் நேரடி நீட்சியாக இருப்பதால் குழப்பம் ஏற்படாது. பரிவூற்று என்பதில் வரும் ஊற்று = Source மாத்திரம்தான் குறிக்கும், முழு மென்கலனையும் குறிக்காது. ஆனால் ஸ்டால்மானின் சித்தாந்தப்படி இது முழு மென்கலனையும் குறித்தாக வேண்டும், ஆணைமூலம் அதன் ஒரு பகுதிதான். எனவே, free software என்பதில் software என்ற இடத்தில் மென்கலன் வந்தாக வேண்டும், (எப்படி எல்லா disk களையும் வட்டு என்று அழைக்கிறோமோ அதேபோல்).
பரிவூற்று, திறவூற்று என்பவை நீட்டிக்க முடியாதா குழப்பம் தரக்கூடும் மொழியாக்கங்கள் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து. இதை தமிழ் உலகம் குழுமத்திலோ, வேறு இடங்களிலோ முன்னெடுத்துச் செல்லமுடியாதா நிலையில் இருக்கிறேன் (வேலைப்பளு ஒரளவுக்கு மேல் கடிதங்களைப் படிக்க இடம்தருவதில்லை). எனவே, இதை யாராவு முற்செலுத்தவும். ஆர்வமுள்ளவர்கள் இங்கோ, என்னுடைய வலைபபதிவிலோ எழுதினால் நன்றியுடையவனாக இருப்பேன்.
இறுதியாக, என்னுடைய நீண்ட (பலவருடச்) சிந்தனைக்குப்பிறகு
Open Source - திறமூலம் (திறந்த ஆணைமூலம்)
Free Software - தளையறு மென்கலன்.
I like for Free and Open Source Software - கட்டற்ற திறமூல மென்பொருள் நீங்கள் பல இடங்களில் திறந்த மூலம் என்ற பொது எண்ணக்கருவை குறிக்க திறந்த ஆணைமூலம் என்று குறிப்பிடுவது அவ்வளவு சரியல்ல. திறந்த ஆணைமூலம் மென்பொருளுக்கு மட்டுமே. --Natkeeran 18:03, 26 ஏப்ரல் 2006 (UTC)
திறமூலம் எதிர் திறந்த மூலம் ஒரு முடிவு எடுக்கலாமா?
[தொகு]கட்டற்ற மென்பொருட்கள் என்பதை அனேகர் ஏற்று கொண்டுள்ளார்கள் போல தெரிகின்றது. திற என்றால் ஒரு கட்டளை இடுவது போல தெரிகின்றது, ஆனால் சுருக்கமாக இருக்கின்றது. திறந்த மூலம் கருத்தை விளக்கமாக தெரிகின்றது. ஆகையால் எனக்கு திறந்த மூலம் பொருத்தமாக இருக்கின்றது.
- கட்டற்ற மென்பொருள் - Free Software
- திறந்த மூலம் மென்பொருள்/திறந்த மூல மென்பொருள் - Open Source Software
- கட்டற்ற மற்றும் திறந்த மூலம் மென்பொருட்கள் (கதிமூமென்) - Free and Open Source Software (FOSS)
--Natkeeran 15:56, 7 ஜூலை 2006 (UTC)
நானும் நற்கீரனின் கருத்தோடு உடன்படுகிறேன். திறந்த மூலம் நல்ல சொல். அத்தோடு தளையறு மென்கலன் என்பதைவிட கட்டற்ற மென்பொருள் என்பது அழகாகவும் இலகுவில் விளங்கக்கூடியதாகவும் இருக்கிறது. FOSS என்பதற்கு நாம் கட்டற்ற மற்றும் திறந்த மூல மென்பொருட்கள் என்று பயன்படுத்தலாம். --மு.மயூரன் 18:47, 7 ஜூலை 2006 (UTC)
நற்கீரன், இப்போது மீண்டுமொருமுறை வெங்கட்டின் கட்டுரைய படித்தபோது தளையறு மென்பொருள் என்ற சொல் பற்றி மீண்டும் யோசிக்கவேண்டியதாகிறது. தளையறுக்கும் மென்பொருள் என்ற அர்த்தமும் கூடவே வருவது அழகாக இருக்கிறதில்லியா? கட்டறு மென்பொருள் என்று சொல்லும் போது சொல்லின் லாவகம் அற்றுப்போகிறதாய் உணர்கிறேன்.
அத்தோடு இன்னுமொரு விடயம் மனதில் தோன்றியது. கட்டுத்தளை என்ற சொல் பயன்பாட்டில் உள்ளது. இது கட்டு, தளை ஆகிய சொற்களுக்கிடையேயான நுணுக்கமான வேறுபாட்டை விளக்குகிறதா?
--மு.மயூரன் 18:52, 7 ஜூலை 2006 (UTC)
ஓ கடவுளே : - ) மயூரன் இறுதியாக உங்கள் தெரிவை சொல்லுங்கள். மற்றவர்களும் அவ்வாறே செயதால் நன்று. நன்றி. --Natkeeran 20:13, 7 ஜூலை 2006 (UTC)
நற்கீரன், நான் குழப்பம் விளைவிப்பதற்காக சொல்லவில்லை. சில இடங்களில் கட்டற்ற என்று பயன்படுத்துவது வசதியாக இருக்கிறது. உதாரணமாக மக்கள் மத்தியில் பேசும்போது, கண்காட்சிகளில் பிரசாரம் செய்யும் போது இந்தச்சொல் மிகவும் உதவி செய்க்கிறது. சில இடங்களில் தளையறு என்ற சொல் பயன்படுகிறது. தத்துவ ரீதியாக எதையாவது எழுதும்போது, திறந்த மூலம் என்பதோடு எனக்கு முழுமையான உடன்பாடு. 'கட்டற்ற' என்பதோடு எனக்கு எந்தவிதமான முரண்பாடும் இல்லை. மற்றவர்களின் கருத்துக்களை ஆலோடு எதிர்பார்க்கிறேன். வெங்கட் தன் நிலைப்பாட்டை மாற்ற மாட்டார் எனவே நினைக்கிறேன். இராம.கி இன் மின்னஞ்சல் முகவரி உங்களிடம் இருந்தால் ஒருமுறை அவரோடு ஆலோசித்துப்பாருங்கள். --மு.மயூரன் 05:09, 8 ஜூலை 2006 (UTC)