பகவல்பூர் இல்லம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பகவல்பூர் இல்லம் (Bahawalpur House) என்பது தில்லியின் பகவல்பூர் நவாபின் முன்னாள் குடியிருப்பு வீடு ஆகும். அவ்வீடு 1, சிக்கந்திரா சாலை மற்றும் பகவன்தாசு வீதியில் அமைந்துள்ளது.

சுதந்திரம் அடைந்த பிறகு 1969 ஆம் ஆண்டு முதல் 1974 ஆம் ஆண்டுவரை இவ்வரண்மனை தற்காலிகமாக அமெரிக்க நூலமாகப் பயன்படுத்தப்பட்டது. அதன்பின்னர் தேசிய நாடகப்பள்ளி அதனுடைய தலைமையகத்தை இங்கு மாற்றியது[1]. தேசிய கதகளி நடனக் கழ்கத்திற்கும் இங்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது[2].

2011 ஆம் ஆண்டில் தில்லி மெட்ரோ அமைக்கப்பட்ட பொழுது இந்த வீட்டுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது. பல்வேறு போராட்டங்களின் காரணமாக இந்த அழகிய அரண்மனை காப்பாற்றப்பட்டது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-09-20. பார்க்கப்பட்ட நாள் 2015-11-27.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-12-12. பார்க்கப்பட்ட நாள் 2015-11-27.
  3. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-otherstates/high-drama-nsd-is-here-to-stay-after-all/article1453718.ece
"https://ta.wikipedia.org/w/index.php?title=பகவல்பூர்_இல்லம்&oldid=3792972" இலிருந்து மீள்விக்கப்பட்டது