பகவத் பிரசாத் மொகந்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பகவத் பிரசாத் மொகந்தி
Bhagabat Prasad Mohanty
ஒடிசாவின் சட்டமன்றம்
பதவியில்
1971–1974
முன்னையவர்சரோஜ் காந்தா காணுங்கோ
பின்னவர்பெத் பிரகாசு அகர்வால்
தொகுதிகேந்திரபாரா சட்டமன்ற தொகுதி
பதவியில்
1985–1990
முன்னையவர்இந்திரமணி ரூட்டு
பின்னவர்பெத் பிரகாசு அகர்வால்
தொகுதிகேந்திரபாரா சட்டமன்ற தொகுதி
பதவியில்
1995–2000
முன்னையவர்பெத் பிரகாசு அகர்வால்
பின்னவர்பெத் பிரகாசு அகர்வால்
தொகுதிகேந்திரபாரா சட்டமன்ற தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1929-11-27)27 நவம்பர் 1929
இறப்பு8 திசம்பர் 2019(2019-12-08) (அகவை 90)
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு

பகவத் பிரசாத் மொகந்தி (Bhagabat Prasad Mohanty) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1929 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்த இவர் ஒரு வழக்கறிஞரும் ஆவார். ஒடிசா சட்டமன்றத்தின் சட்டமன்ற உறுப்பினராக மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒடிசா அரசின் உயர்கல்வி அமைச்சராகவும் பணியாற்றினார். [1] [2]

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

பகவத் பிரசாத்து மொகந்தி 1929 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் தேதியன்று பிறந்தார் [3] 1971 ஆம் ஆண்டில் பிரயா சோசலிசுட்டு கட்சி வேட்பாளராக கேந்திரபாராவிலிருந்து ஒடிசா சட்டமன்றத்தின் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். [4] பின்னர், இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் சேர்ந்தார். 1985 மற்றும் 1995 ஆம் ஆண்டுகளில் இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளராக ஒடிசா சட்டமன்றத்தின் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார் [5] [6]

மொகந்தி 8 டிசம்பர் 2019 அன்று தனது 90 ஆவது வயதில் காலமானார் [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Former Odisha Minister Bhagabat Mohanty Passes Away". 8 December 2019. பார்க்கப்பட்ட நாள் 8 December 2019.
  2. "Former Odisha Minister Bhagabat Prasad Mohanty No More". 8 December 2019. பார்க்கப்பட்ட நாள் 8 December 2019.
  3. "Bhagabat Prasad Mohanty". பார்க்கப்பட்ட நாள் 8 December 2019.
  4. "Orissa Assembly Election Results in 1971". பார்க்கப்பட்ட நாள் 23 October 2019.
  5. "Orissa Assembly Election Results in 1985". பார்க்கப்பட்ட நாள் 23 October 2019.
  6. "Orissa Assembly Election Results in 1995". பார்க்கப்பட்ட நாள் 23 October 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பகவத்_பிரசாத்_மொகந்தி&oldid=3802933" இலிருந்து மீள்விக்கப்பட்டது