உள்ளடக்கத்துக்குச் செல்

நோவா தீநுண்மி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நோவா தீநுண்மி
Nova virus
தீநுண்ம வகைப்பாடு
குழு:
Group V ((-)ssRNA)
வரிசை:
புன்யாவிடாலெசு
குடும்பம்:
ஹேண்டாவைரிடே
பேரினம்:
ஆர்த்தோஹேண்டாவைர்சு
இனம்:
நோவா வைரசு

நோவா தீநுண்மி (Nova virus)(நோவா வைரஸ்) என்பது ஒற்றை-புரி, எதிர்மறை உணர்வு, உறையிடப்பட்ட ஆர். என். ஏ. ஆர்த்தோஹான்டவைரசு ஆகும் . இது சிறுநீரக நோய்க்குறியுடன் ஹான்டவைரஸ் ரத்தக்கசிவு காய்ச்சலை ஏற்படுத்தும் பிற ஐரோப்பிய மற்றும் ஆசிய ஹன்டவைரஸ்களுடன் இனவழித் தொடர்புடையது. இந்த தீநுண்மியின் மனித நோய்த்தொற்றுகள் எதுவும் பதிவாகவில்லை.[1]

இருப்பிடம்

[தொகு]

நோவா தீநுண்மி முதன்முதலில் ஹங்கேரி மற்றும் பிரான்சில் காணப்படும் ஐரோப்பிய துன்னெலியிலிருந்து (தல்பா யூரோபியா) கண்டுபிடிக்கப்பட்டது. கொறித்துண்ணிகளிலே பிரதான இந்த வைரசுகள் காணப்படும் என முன்னர் நம்பப்பட்டது, ஆனால் பூச்சி உண்ணும் வெளவால், மூஞ்சுறு, துன்னெலி (சோரிசிடே மற்றும் டால்பிடே) இனங்களிலும் இந்த தீநுண்மி இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.[2]

மேலும் காண்க

[தொகு]
  • சிறுநீரக நோய்க்குறியுடன் ஹன்டவைரஸ் ரத்தக்கசிவு காய்ச்சல்

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நோவா_தீநுண்மி&oldid=3268495" இலிருந்து மீள்விக்கப்பட்டது