உள்ளடக்கத்துக்குச் செல்

நோங்கமைதேம் ரத்தன்பாலா தேவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நோங்கமைதேம்
ரத்தன்பாலா தேவி
சுய தகவல்கள்
முழுப் பெயர்நோங்கமைதேம்
ரத்தன்பாலா தேவி
பிறந்த நாள்2 திசம்பர் 1999 (1999-12-02) (அகவை 24)[1]
பிறந்த இடம்மணிப்பூர்
ஆடும் நிலை(கள்)முன்கள வீரர்
கழகத் தகவல்கள்
தற்போதைய கழகம்
சேது கால்பந்து கழகம்
எண்7
முதுநிலை வாழ்வழி*
ஆண்டுகள்கழகம்தோற்.(கோல்)
2017-18காங்சப் சாலை இளைஞர் உடல்நலம்
மற்றும் விளையாட்டுச் சங்கம்
6(7)
2019-சேது கால்பந்து கழகம்7(7)
பன்னாட்டு வாழ்வழி
201419 வயதுக்குட்பட்டோருக்கான
இந்திய அணி
2017-இந்தியா24(10)
*கழக உள்ளூர் சுற்றுப் போட்டிகள் தோற்றங்களும் கோல்களும், 23 மே 2019 அன்று சேகரிக்கப்பட்டது.
‡ தேசிய அணிக்கான விளையாட்டுகளும் கோல்களும் 10 ஏப்ரல் 2019 அன்று சேகரிக்கப்பட்டது.

நோங்கமைதேம் ரத்தன்பாலா தேவி (Nongmaithem Ratanbala Devi) ஒரு இந்திய பெண் கால்பந்து வீராங்கனையாவார்.[1] இவர் தனது சொந்த மாநிலமான மணிபூருக்கும், இந்தியப் பெண்கள் தேசிய அணிக்காகவும் விளையாடுகிறார். இவர் இந்திய மகளிர் போட்டிகளில் காங்சப் சாலை இளைஞர் உடல்நலம் மற்றும் விளையாட்டுச் சங்கத்திற்காக விளையாடுகிறார்.[2]

சொந்த வாழ்க்கையும், பின்னணியும்

[தொகு]

1999 பிப்ரவரி 12, அன்று இந்தியாவின் மணிப்பூர் மாநிலம், பிஷ்ணுபூர் மாவட்டத்தின் நம்போல் கதோங்கில் பிறந்தார்.

இவர் விளையாட்டாக தன் வீட்டருகே வசித்த சிறுவர்களுடன் கால்பந்து விளையாட ஆரம்பித்தார். படிப்படியாக, அந்த விளையாட்டில் இவரது ஆர்வம் அதிகமானது. இவரது தந்தை, ஒரு தனியார் நிறுவனத்தில் வாகன ஓட்டுநராக இருந்தார். பண நெருக்கடி இருந்தபோதிலும் கால்பந்தில் தனது மகள் சிறந்து விளங்க ஆதரித்தார்.

ஒரு நாள் இந்திய மகளிர் கால்பந்து அணியில் விளையாட வேண்டும் என்ற விருப்பத்திற்காக தேவி, இம்பாலில் உள்ள விளையாட்டு ஆணையத்தின் பயிற்சி முகாமில் சேர்ந்தார். அங்கு பயிற்சியாளர்களும், பயிற்சி வசதிகளும் இருந்தன. ஆனால் போட்டிகளில் பங்கேற்க அவர்களிடம் ஒரு குழு இருக்கவில்லை. எனவே, போட்டி அதிகம் இல்லாததால், தேவி உள்ளூர் காங்சப் சாலை இளைஞர் உடல்நலம் மற்றும் விளையாட்டுச் சங்கத்தில் சேர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இங்கு இவர் சிறப்பான பயிற்சி வசதிகளையும் ஓஜா ஜாபாவில் ஒரு திறமையான பயிற்சியாளரையும் கண்டறிந்தார். இங்கு அளிக்கப்பட்ட பயிற்சி இவரது கால்பந்து திறன்களையும் நுட்பங்களையும் மேம்படுத்த உதவியது. இவர் பல்வேறு உள்நாட்டு போட்டிகளில் தனது சொந்த மாநிலமான மணிப்பூருக்காக விளையாடத் தொடங்கினார். தனது விளையாட்டு வாழ்க்கையில் இந்த அளவிற்கு முன்னேற காங்சப் சாலை இளைஞர் உடல்நலம் மற்றும் விளையாட்டுச் சங்கத்தின் பயிற்சியாளரும் தனது தந்தையின் ஆதரவுமே காரணம் என்று தேவி கூறுகிறார்.

தொழில்சார்ந்த சாதனைகள்

[தொகு]

தேவியின் தாக்குதல் பாணி இவரது அணிகளுக்கு அதிக கோல்களை கொண்டு வந்து சேர்த்தது. இவர் பல உள்நாட்டு போட்டிகளில் மணிப்பூர் அணிக்கு வெற்றியைப் பெற்றுத்தந்துள்ளார். இவர் 2015இல் இந்திய பெண்கள் இளையோர் அணியில் தேர்வு செய்யப்பட்டார். இருப்பினும், இவர் இந்திய மகளிர் மூத்தோர் பிரிவினர் அணியி்ல் இடம் பெற ஆவலுடன் காத்திருந்தார். இறுதியாக, 2017 ஆம் ஆண்டில் இவர் இந்தியாவிற்காக விளையாட வேண்டிய தருணம் வந்தது.

அப்போதிருந்து, தேவி இந்திய அணியின் முக்கிய உறுப்பினராக இருந்து வருகிறார். இவர் முன்கள வீரராக விளையாடுவதை விரும்பினாலும், தேசிய அணியில் இவரது பங்கு நடுக்கள வீரராக விளையாடுவதும் தற்காப்பு நிலைகளில் செயல்படுவதும் ஆகும். தனது பயிற்சியாளர் கூறும் எந்த நிலையிலும் விளையாடுவதில் தனக்கு மகிழ்ச்சிதான் என்று தேவி கூறுகிறார்.

2020இல் சர்வதேச பெண்கள் போட்டியின், நான்காவது முறையின் இறுதிப் போட்டிக்கு, தேவி தனது அணியான காங்சப் சாலை இளைஞர் உடல்நலம் மற்றும் விளையாட்டுச் சங்கத்தை வழி நடத்தினார்.

2019ஆம் ஆண்டில் நேபாளத்தில் நடந்த ஐந்தாவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய மகளிர் அணியில், இவர் இடம் பெற்றிருந்தார். 2019 ஆம் ஆண்டில் நடந்த, 13வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்ற, இந்திய அணியிலும் இவர் இடம் பெற்றிருந்தார். அனைத்துலக கால்பந்து மகளிர் ஒலிம்பிக் தகுதிப் போட்டியில், இந்திய அணியிலும், இவர் விளையாடினார். இவர் ஆங்காங், இந்தோனேசியா நாடுகளுக்கு இடையேயான போட்டிகளில் , நட்பு அடிப்படையில் விளையாடினார். இந்தோனேசியாவுக்கு எதிரான ஒரு போட்டியில், இவர் தனது முதல் பன்னாட்டு "ஹாட்ரிக்" வெற்றியைப் பெற்றார்.[3][4] இவரது சிறப்பு திறன்களைக் குறிப்பிட்டு, அனைத்திந்திய கால்பந்து கூட்டமைப்பு, இவரை "இந்திய மகளிர் அணியின் நடுப்பகுதி நுரையீரல்" என்று வடைமொழியுடன் அழைக்கிறது.

விளையாட்டுப் புள்ளிவிவரங்கள்

[தொகு]
சர்வதேச தொப்பிகளும் கோல்களும்
வருடங்கள் தொப்பிகள் கோல்கள்
2017 3 1
2018 3 1
2019 17 8
மொத்தம் 23 10

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Ratanbala Devi profile by AIFF". AIFF.
  2. "Welcome to All India Football Federation". www.the-aiff.com. பார்க்கப்பட்ட நாள் 2018-11-18.
  3. "RATANBALA DEVI'S HATTRICK LEADS INDIA TO 3-0 WIN OVER INDONESIA". www.the-aiff.com. பார்க்கப்பட்ட நாள் 2019-04-04.
  4. Sportstar, Team. "Football: Ratanbala Devi's hat-trick leads India women to comfortable win". Sportstar (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-04-10.
19 பெப்ரவரி 2021. அன்று இருந்த தகவல்களின் படி