நொட்டிங்காமின் செரிப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லூயிஸ் ரீட்டின் சித்தரிப்பு, 1912

நொட்டிங்காமின் செரிப் (Sheriff of Nottingham) என்பவர் இராபின் ஊட்டின் கதையில் வரும் அவரின் முக்கிய எதிரியாவார். இவர் பொதுவாக நொட்டிங்காம்சையர் மக்களை தவறாக நடத்தும் ஒரு அநியாயமான கொடுங்கோலனாக சித்தரிக்கப்படுகிறார். மக்களிடமிருந்து கடுமையான வரி வசூலிக்கிறார். இராபின் ஊட் இவருக்கு எதிராக போராடுகிறார். மேலும் பணக்காரர்களிடமிருந்து திருடி ஏழைகளுக்கு கொடுக்கிறார். இந்தப் பண்புதான் இராபின் ஊட் மிகவும் பிரபலமாக காரணமாகிறது. செரிப் இராபின் ஊட்டின் பரம எதிரியாகக் கருதப்படுகிறார்.

இந்த கதாபாத்திரம் யாரை அடிப்படையாகக் கொண்டது என்பது தெரியவில்லை. இராபின் ஊட்டின் செவிவழிக்கதையில் (குறைந்தபட்சம் 14 ஆம் நூற்றாண்டு வரை பழமையானது), பாரம்பரியமாக நொட்டிங்காம் செரிப்பை அவரது பதவி பெயரால் மட்டுமே குறிப்பிடப்படுகிறது. உண்மையில் நொட்டிங்காம் நகரில் செரிப் இருந்ததில்லை. இருப்பினும், ஆரம்பகால நார்மன் மன்னர்கள் காலத்திலிருந்தே நொட்டிங்காம்சயர், டெர்பிசையர், அரச காடுகளின் உயர் செரிப் அரசரால் நியமிக்கப்பட்டிருந்தார். எனவே, கதையில் உள்ள பாத்திரம், அரச காடுகளில் ( செர்வுட் வனத்தையும் உள்ளடக்கியது) சட்ட அமலாக்கத்திற்குப் பொறுப்பாக அரச குடும்பத்தால் நியமிக்கபட்ட பதவியை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கலாம். மறுபுறம், இக்கதை உண்மை நிகழ்வுகளில் இருந்து தோன்றியதாகக் இருகக்கூடும் என்று கருதினால் (செவிவழிக்கதையின் ஆரம்ப பதிப்பு 200 ஆண்டுகளுக்குப் பிறகு தோன்றினாலும்), இந்தப் பாத்திரம் ஒன்றை நபர் அல்லது நொட்டிங்காம்சயர், மெர்பிசையர் மற்றும் அரச காடுகளின் உயர் செரிப் பதவியில் அக்காலத்தில் வாழ்ந்த உண்மை நபர்களின் கலவையாகவும் இருக்கக்கூடும். சில பதிப்புகளைக் கொண்டு 1191 முதல் 1194 வரை உயர் செரிப்பாக இருந்த அதிகம் அறியப்படாத ஷெரிப் ஃபிலிப் மார்க் உடன் அடையாளம் காணப்படுகிறார். அவர் 1209 முதல் 1221 வரை நொட்டிங்காம்சயர், டெர்பிசயர் மற்றும் அரச காடுகளின் உயர் செரிஃப் பதவியை வகித்தார். அவர் இங்கிலாந்தின் மன்னர் ஜான் ஆட்சியின் பிற்பகுதியில் (1199 முதல் ஆட்சி செய்தார். 1216 வரை) பதவியில் இருந்தார். [1] இருப்பினும், கதையில் கூறப்படும் செரிப் பொதுவாக அநாமதேயமாகவோ அல்லது புனைப்பெயரில் குறிப்பிடப்படுபவராலவோ இருக்கிறார்.

பாத்திரம்[தொகு]

ஷெர்வுட் காடு வழியாக செல்லும் வணிகப் பாதைகளின் பாதுகாப்பை உறுதி செய்வது அல்லது அரசனுக்கான மான்களை வேட்டையாடுவதிலிருந்து தடுப்பது, இராபின் ஊட் போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்களை பிடிப்பது போன்றவை நொட்டிங்காம் செரிப் பதவியில் இருப்பவரின் பணியாகும். சில கதைகளில், நொட்டிங்காமின் செரிப், இராபின் ஊட்டின் காதலியான மெய்டு மரியான் மீது தகாத ஆசை கொண்டவராக சித்தரிக்கப்படுகிறார். இராபின் ஊட் கதைகளின் முக்கிய எதிர்மறைப் பாத்திரமாக இவர் பரவலாக சித்தரிக்கபடுகிறார். இராபின் ஊட்டின் எதிரிகளான சர் கை ஆஃப் கிஸ்போர்ன் அல்லது இங்கிலாந்து மன்னர் ஜான் (இருவரும் கதையில் அரிதாக இருந்தாலும்) போன்றவர்களுடன் இவர் அடிக்கடி தோன்றுகிறார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Search for a real Robin Hood, Boldoutlaw.com. Retrieved 13 July 2022.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நொட்டிங்காமின்_செரிப்&oldid=3847566" இலிருந்து மீள்விக்கப்பட்டது