செர்வுட் காடு

ஆள்கூறுகள்: 53°12′16.09″N 1°4′21.94″W / 53.2044694°N 1.0727611°W / 53.2044694; -1.0727611
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செர்வுட் காடு
செர்வுட் காடு
Map showing the location of செர்வுட் காடு
Map showing the location of செர்வுட் காடு
அமைவிடம்இங்கிலாந்து
ஆள்கூறுகள்53°12′16.09″N 1°4′21.94″W / 53.2044694°N 1.0727611°W / 53.2044694; -1.0727611

செர்வுட் காடு (Sherwood Forest) என்பது இங்கிலாந்தின் நாட்டிங்காம்சையரில் உள்ள ஒரு அரச காடு ஆகும். இது இராபின் ஊட் குறித்த செவிவழிக் கதையுடன் தொடர்பு கொண்டுள்ளதால் புகழ் பெற்றது.

கடைசி பனிப்பாறை காலத்தின் முடிவில் இருந்து இப்பகுதி மரங்கள் நிறைந்ததாக உள்ளது ( மகரந்தத்தூளியல் மாதிரிகளின் சான்றுகளின்படி). இன்று செர்வுட் வன இயற்கை காப்பகம் 424.75 எக்டேர்கள் (1,049.6 ஏக்கர்கள்) பரப்பளவைக் கொண்டுள்ளது, இது தோர்ஸ்பி ஹால் உள்ள எட்வின்ஸ்டோவ் என்ற கிராமத்தைச் சுற்றி அமைந்துள்ளது. இது ஒரு பழைய மற்றும் மிகப் பெரிய அரச வேட்டைக் காடுகளின் எச்சமாகும். இது பல அண்டை மாவட்டங்களாக விரிவடைந்தது. மேற்கில் எரேவாஷ் ஆற்றையும் கிழக்கு டெர்பிஷையரின் காட்டையும் எல்லையாக கொண்டுள்ளது. டோம்ஸ்டே புத்தகம் 1086 இல் தொகுக்கப்பட்டபோது, இக்காடு நாட்டிங்காம்சையரின் கால் பகுதி (சுமார் 19,000 ஏக்கர் அல்லது 7,800 ஹெக்டேர்) காடு மற்றும் ஹீத் பகுதிகளில் வனச் சட்டங்களுக்கு உட்பட்டது. இக்காட்டின் பெயரைக் கொண்டு செர்வூட் நாடாளுமன்றத் தொகுதி உண்டானது.

இராபின் ஊட் சிலை, ஷெர்வுட் காடு

வரலாறு[தொகு]

1066 ஆம் ஆண்டில், இங்கிலாந்து மன்னர் முதலாம் வில்லியம் செர்வுட் காட்டை அரச வேட்டைக் காடாக மாற்றினார். [1] [2] ஷெர்வுட் காடுகளுக்கு மெர்சியன் மன்னர்கள் அடிக்கடி பயணம் மேற்கொண்டனர். [3]

மன்னர் ஜான் மற்றும் முதலாம் எட்வர்டு ஆகியோரால் இந்தக் காடு பிரபலமானது. கிங் ஜான்ஸ் அரண்மனை என்று பெயர் கொண்ட கிங்ஸ் கிளிப்ஸ்டோனில் வேட்டை விடுதியின் எச்சங்கள் இங்கு காணப்படுகின்றன. [4] [2]

1536 ஆம் ஆண்டில் இங்கிலாந்து மன்னர் எட்டாம் என்றி காலத்தில் , மடாலயங்கள் கலைக்கப்பட்ட பிறகு, செர்வுட்டில் நிலம் விற்கப்பட்டு, தனியாருக்கு உரிமையாக்கப்பட்டது. அது வீட்டுத் தோட்டங்களாக மாற்றப்பட்டது. 1600 களில் மன்னர் முதலாம் ஜேம்சு முதலாம் சார்லசைப் போலவே காட்டிற்கு பயணங்களை மேற்கொண்டனர். மன்னர் இரண்டாம் சார்லசு செர்வுட் காடுகளின் நிர்வாகத்தை மீண்டும் அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார். [4] [3]

1700களில் செர்வுட் நிலத்தின் பெரிய பகுதிகள் தோர்ஸ்பி ஹால், ரஃபோர்ட் அபே, கிளம்பர் பார்க், வெல்பெக் அபே, ஒர்க்சாப் மேனர் ஆகிய தோட்டங்களை உரவாக்கிய தனியாருக்கு விற்கப்பட்டது. இந்த தோட்டங்கள் டுக்கரீஸ் என்று அழைக்கப்பட்டன. நியூஸ்டெட் அபேயும் தனியார் உரிமையாக கட்டப்பட்டது. [4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Visit Nottinghamshire, The History of Sherwood web https://www.visit-nottinghamshire.co.uk/explore/sherwood-forest/history-of-sherwood retrieved on the 8th April 2023
  2. 2.0 2.1 Robert White,The Dukery, and Sherwood Forest, (1875) retrieved in the 8th April 2023
  3. 3.0 3.1 William Horner Groves, The History of Mansfield, (1894) retrieved on the 8th April 2023
  4. 4.0 4.1 4.2 cite web Nottinghamshire County Council, History of Sherwood Forest, Robin Hood and Major Oak, 2023 retrieved on the 8th April 2023
"https://ta.wikipedia.org/w/index.php?title=செர்வுட்_காடு&oldid=3873728" இலிருந்து மீள்விக்கப்பட்டது