உள்ளடக்கத்துக்குச் செல்

நொடோரியஸ் பி.ஐ.ஜி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
த நொடோரியஸ் பி.ஐ.ஜி
இயற்பெயர்கிரிஸ்தஃபர் ஜார்ஜ் லடோர் வாலஸ்
பிற பெயர்கள்த நொடோரியஸ் பி.ஐ.ஜி. (The Notorious B.I.G.), பிகி ஸ்மால்ஸ் (Biggie Smalls), பிக் பாப்பா (Big Poppa), ஃப்ராங்க் வைட் (Frank White)
பிறப்பு(1972-05-21)மே 21, 1972
நியூயார்க் நகரம், நியூயார்க், ஐக்கிய அமெரிக்கா
பிறப்பிடம்நியூயார்க் நகரம், நியூயார்க்
இறப்புமார்ச்சு 9, 1997(1997-03-09) (அகவை 24)
லாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா
இசை வடிவங்கள்ஹிப் ஹொப்
தொழில்(கள்)ராப் பாடகர், ராப் எழுத்துவர்
இசைத்துறையில்1992-1997
வெளியீட்டு நிறுவனங்கள்பாட் பாய் (Bad Boy)
இணைந்த செயற்பாடுகள்ஜூனியர் M.A.F.I.A., லில் கிம், ஃபெயித் எவன்ஸ், பஃப் டேடி
இணையதளம்notoriousbig.com

த நொடோரியஸ் பி.ஐ.ஜி. (The Notorious B.I.G.) அல்லது பிகி ஸ்மால்ஸ் (Biggie Smalls) அல்லது பிக் பாப்பா (Big Poppa), என்றழைக்கப்படும் கிரிஸ்தஃபர் ஜார்ஜ் லடோர் வாலஸ் (Christopher George Latore Wallace), அமெரிக்காவின் புகழ்பெற்ற ராப் இசைக் கலைஞர் ஆவார். நியூயார்க் நகரத்தில் பிறந்து வளந்தார். ராப் இசை உலகத்திற்கு வருவதற்கு முன் 1980களில் போதைப் பொருள் விற்பவராக இருந்த பிகி அதை 1992ல் கைவிட்டு இசைத்துறையில் நுழைந்தவர். 1994ல் இவர் முதலாம் ஆல்பம், ரெடி டு டை, படைத்து ஹிப் ஹாப்பில் புகழுக்கு வந்தார். இந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் பிகியின் முன்னாள் நண்பர் டூபாக் ஷகூர் ஐந்து முறை துப்பாக்கிச் சூட்டிற்கு உள்ளானார். டூபாக் இந்த செயலை பிகி மேல் குற்றம் சாட்டினார். இவர்களின் எதிரிடை முளைத்து மேற்கு கடற்கரை ராப் பாடகர்களுக்கும் கிழக்கு கடற்கரை ராப் பாடகர்களுக்கும் ஒரு உக்கிரமான எதிரிடை இருந்தது. இதனால் 1996ல் செப்டம்பர் மாதத்தில் டூபாக் சுட்டுக்கொல்லப்பட்டு காலமானார்; 6 மாதங்களுக்கு பிறகு, பிகி சுட்டுக்கொல்லப்பட்டு காலமானார். இந்த இரண்டு ஆட்கொல்லிகளை இன்று வரை காவல்துறை கண்டுபிடிக்கவில்லை. பிகியின் மரணத்திற்கு 15 நாட்களுக்கு பிறகு இவரின் இரண்டாம் ஆல்பம், "லைஃப் ஆஃப்டர் டெத்", வெளிவந்தது. இன்று வரை இந்த ஆல்பம் 10 மில்லியன் நகல்கள் விற்றுக்கொண்டிருப்பது. பல ராப் ஆராய்ச்சி செய்பவர்கள் இவர் ராப் இசை வரலாற்றில் மிக உயர்ந்த கலைஞர்களில் ஒன்று என்று உறுதிசொல்கிறார்கள்.[1][2][3]

ஆல்பங்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Rap's first lady". The Guardian. July 10, 2005. Retrieved September 23, 2024.
  2. "Notorious B.I.G: In His Own Words, And Those of His Friends". MTV.com. March 7, 2007. Archived from the original on March 11, 2007. Retrieved March 11, 2007.
  3. "The 10 Greatest Rappers of All Time". Billboard. November 12, 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நொடோரியஸ்_பி.ஐ.ஜி&oldid=4100266" இலிருந்து மீள்விக்கப்பட்டது