நைட்ராட்டின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நைட்ராட்டின்
Nitratine
Nitratine-548175.jpg
பொதுவானாவை
வகைநைட்ரேட்டு கனிமம்
வேதி வாய்பாடுNaNO3
இனங்காணல்
மோலார் நிறை84.99 g/mol
நிறம்நிறமற்றது, வெண்மை,சாம்பல், மஞ்சள்,பழுப்பு
படிக இயல்புசிறு மணிகள் - முகமற்றது முதல் சற்று முகங்கொண்ட படிகங்கள்; ஒரே மாதிரியாக பிரித்தறிய முடியாத படிகங்கள் பெரியதாக உருவாகின்றன
படிக அமைப்புமுக்கோணம்
பிளப்பு{1011} இல் தெளிவு
விகுவுத் தன்மைபகுதியானது - வளைந்த செதில்கள்
மோவின் அளவுகோல் வலிமை1.5 - 2
மிளிர்வுகண்ணாடி பளபளப்பு
கீற்றுவண்ணம்வெண்மை
ஒளிஊடுருவும் தன்மைஒளிபுகும்
ஒப்படர்த்தி2.26
ஒளியியல் பண்புகள்ஓரச்சு (-)
ஒளிவிலகல் எண்nω = 1.580 - 1.587 nε = 1.330 - 1.336
இரட்டை ஒளிவிலகல்δ = 0.250-0.251
கரைதிறன்நீரில் கரையும்
பிற சிறப்பியல்புகள்நீருறிஞ்சும்
மேற்கோள்கள்[1][2]

நைட்ராட்டின் (Nitratine) என்பது NaNO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். நைட்ராடைட்டு, கனசதுர நைட்டர், சிலி சால்ட்பீட்டர் போன்ற பல பெயர்களாலும் இக்கனிமம் அழைக்கப்படுகிறது. சோடியம் நைட்ரேட்டின் இயற்கையாகத் தோன்றும் வடிவமே நைட்ராட்டின் ஆகும். சால்ட்பீட்டரின் சோடியம் வரிசைச் சேர்மம் என்று இது வகைப்படுத்தப்படுகிறது. முக்கோணப் படிகத் திட்டத்தில் இது படிகமாகிறது. ஆனால் அரிதாக நல்ல படிகவடிவத்தில் நைட்ராட்டின் தோன்றுகிறது. இதன் படிக வடிவம் கால்சைட்டின் படிகவடிவத்தை ஒத்திருக்கிறது. மென்மையும் இலேசானதாகவும் உள்ள நைட்ராட்டினின் மோவின் கடினத்தன்மை அளவுகோல் மதிப்பு 1.5 முதல் 2 என மதிப்பிடப்படுகிறது. 2.24 முதல் 2.29 என்ற ஒப்படர்த்தியும், nω=1.587 மற்றும் nε=1.336 முதலான ஒளிவிலகல் எண் மதிப்பும் பிற சில அளவீடுகளாகும். [3]

வழக்கமான நைட்ராட்டின் படிகங்கள் வெள்ளை பூசப்பட்டது போலவும் சாம்பல் முதல் மஞ்சள் நிற பழுப்பு நிற பொருண்மைகளாகவும் இருக்கின்றன. அரிதான படிகங்கள் பொதுவாக கால்சைட்டு கட்டமைப்பின் அசமபக்கமான ஒழுங்கற்ற வடிவத்தைக் கொண்டுள்ளன. வறண்ட சூழலில் படிகத்தூளாக மட்டுமே இது காணப்படுகிறது. நீரில் மிகவும் கரையக்கூடியதாகவும் காற்றில் இருந்து தண்ணீரை உறிஞ்சக் கூடியதாகவும் ஈரப்பதமான காற்றில் வெளிப்படும் போது சோடியம் நைட்ரேட் கரைசல் தேங்கிய ஒரு குட்டையாகவும் மாறும்.

நைட்ராட்டின் ஒரு காலத்தில் உரம் மற்றும் பட்டாசு உள்ளிட்ட பிற இரசாயன பயன்பாடுகளுக்கு உதவும் நைட்ரேட்டுகளின் முக்கிய ஆதாரமாக இருந்தது. கலிபோர்னியாவிலுள்ள மலைத் தொடர்களிலும் சிலியின் அட்டகாமா பாலைவனத்திலும் இது 1845 ஆம் ஆண்டு முதல் அறியப்பட்டு வருகிறது. அமோனியா தயாரிக்கும் ஏபர்-போசு செயல்முறை தடைசெய்யப்பட்ட அமெரிக்காவில் இன்னமும் கூட இயற்கை வேளாண்மையில் இது பயன்படுத்தப்படுகிறது. ஆனால் பன்னாட்டு இயற்கை வேளாண் முறையில் இது தடை செய்யப்பட்டுள்ளது. [4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Nitratine page on mindat.org
  2. Nitratine page on webmineral.com
  3. Nesse, W, introduction to Optical Mineralogy, Fourth Edition (Oxford, New York, Oxford University Press) 2013. appendix II, B.3
  4. The Omnivores Dilemma - Michael Pollan

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நைட்ராட்டின்&oldid=2979054" இருந்து மீள்விக்கப்பட்டது