நேபாளத்தின் கொடி
Jump to navigation
Jump to search
நேபாளத்தின் கொடி, நேபாளத்தின் முன்னாள் ஆட்சியாளர்களான ரனா அரசவம்சத்தின் வெவ்வேறு கிளைகளின் கொடிகள் இரண்டின் இணைப்பாகும். நேபாளத்தின் கொடி ஒன்று மட்டுமே உலக தேசியக் கொடிகளில் செவ்வகமற்ற கொடியாகும்.
இக்கொடி டிசம்பர் 16 1962 இல் புதிய அரசியலமைப்புச் சட்ட வரைவின் போது ஏற்றுக் கொள்ளப்பட்டது. தனி முக்கோண கொடிகள் கிபி 17வது நூற்றாண்டு முதல் பயன்பாட்டில் இருந்தன. எனினும் கிபி 19வது நூற்றாண்டு முதல் இரட்டை முக்கோண கொடி பாவிக்கப்பட்டது.
கொடியின் ஓரம் வழியே காணப்படும் நீல நிறம் சமாதானத்தைக் குறிக்கிறது. மேலும் செந்நிறம் நேபாளத்தின் தேசிய நிறமாகும். முன்னர் அரசரின் குறியீடுகளாக இருந்த சூரியனும் பிரைச் சந்திரனும் இப்போது நேபாளத்தின் நீண்ட இருப்புக்காண அதன் மக்களது நம்பிக்கையாக கொள்ளப்படுகிறது.