நேனாத் செசுடன்
Appearance
நேனாத் செசுடன் (Nenad Sestan) யேல் மருத்துவப் பள்ளியில் நரம்பியல், ஒப்பீட்டு மருத்துவம், மரபியல் மற்றும் மனநலவியல் துறைகளில் பேராசிரியராகப் பணிபுரிந்தார். இவர் 1971 ஆம் ஆண்டு பிறந்தவர் ஆவார் [1]. 1995 ஆம் ஆண்டு குரோவாசியா நாட்டிலுள்ள யாக்ரெப் பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பள்ளியில் பட்ட மேற்படிப்பையும், 1999 ஆம் ஆண்டு அமெரிக்காவின் கனெக்டிகட் மாநிலத்திலுள்ள யேல் மருத்துவப் பள்ளியில் முனைவர் பட்டமும் இவர் பெற்றார் [2][3][4].
செசுடன் மற்றும் இவரது ஆராய்ச்சி தொடர்பான செய்திகளை 2019 ஆம் ஆண்டு சூலை மாதம் நியூயார்க் டைம்சு இதழ் வெளியிட்டது [5]. நேச்சர் என்ற விஞ்ஞான இதழ் தொகுத்த அறிவியலில் முக்கியத்துவம் வாய்ந்த பத்து நபர்கள் என்ற பட்டியலில் நேச்சர் 10 என்ற தலைப்பிலும் 2019 ஆம் ஆண்டு இவர் தோன்றினார் [6].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Nenad Šestan: Obama mi je dao 15 milijuna dolara. Moj zadatak je otkriti tajnu našeg mozga!" (in குரோஷியன்). 28 May 2011. பார்க்கப்பட்ட நாள் 17 April 2019.
- ↑ "Nenad Sestan, MD, PhD". medicine.yale.edu. Yale School of Medicine. பார்க்கப்பட்ட நாள் 17 April 2019.
- ↑ Antonio Regalado (25 April 2018). "Researchers are keeping pig brains alive outside the body". MIT Technology Review. பார்க்கப்பட்ட நாள் 17 April 2019.
- ↑ Pallab Ghosh (27 April 2018). "Pig brains kept alive without a body". BBC News. பார்க்கப்பட்ட நாள் 17 April 2019.
- ↑ Matthew Schaer (2 July 2019). "Scientists Are Giving Dead Brains New Life. What Could Go Wrong?". த நியூயார்க் டைம்ஸ். பார்க்கப்பட்ட நாள் 6 July 2019.
- ↑ "Nature's 10". Nature. பார்க்கப்பட்ட நாள் 30 December 2019.