நேதன் ரோசென்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நேதன் ரோசென் என்பவர் ஒரு இஸ்ரேலிய இயற்பியலாளர் ஆவார். இவர் 22 மார்ச் 1909 ஆம் ஆண்டில் நியூ யார்க்கில் உள்ள புரூக்லின் என்னும் இடத்தைச் சேர்ந்த யூதக் குடும்பம் ஒன்றில் பிறந்தார். இவர் மசச்சூசெட்ஸ் தொழிநுட்பக் கழகத்தில் கல்வி பயின்றார். 1935 ஆம் ஆண்டில் நியூ ஜேர்சியின் பிரின்ஸ்டனில் அல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு உதவியாளராகச் சேர்ந்தார். 1945 ஆம் ஆண்டுவரை அவர் அப் பணியிலேயே தொடர்ந்தார். அதன் பின்னர் இஸ்ரேலில் இயற்பியல் தொழிலைத் தொடருமாறு ஐன்ஸ்டீன் அவருக்கு ஊக்கமளித்தார்.

குவாண்டம் விசையியலில், ஈபிஆர் முரண்தருகுழப்பம் எனப்படுவது பற்றி 1935 ஆம் ஆண்டில் எழுதப்பட்ட இயற்பியல் உண்மை பற்றிய குவாண்டம் விசையியல் விளக்கத்தை முழுமையானதாகக் கருதலாமா? என்னும் தலைப்பிட்ட ஆய்வுக் கட்டுரையை, ஐன்ஸ்ட்டீன், பொடோல்ஸ்கி ஆகியோருடன் சேர்ந்து எழுதினார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நேதன்_ரோசென்&oldid=1858266" இருந்து மீள்விக்கப்பட்டது