உள்ளடக்கத்துக்குச் செல்

நேசமணிக்காக வேண்டிக் கொள்ளவும்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரண்ட்ஸ் (2001) திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேல் ஏற்று நடித்த நகைச்சுவைக் கதாபாத்திரமான நேசமணி தலையில் மாடி மேலிருந்து சுத்தியல் தவறி விழுந்து மயக்கமுறும் நிலையிலான காட்சியின் தருணத்தை விளக்கும் ஒரு கார்டுன் வடிவிலான புகைப்படம் (சுட்டனை) ஆகும்.

நேசமணிக்காக வேண்டிக் கொள்ளவும் , (Pray for Nesamani), 2019 மே மாதத்தில் சமூக ஊடகத் தளங்களில் பிரபலமடையத் தொடங்கிய ஓர் இணையச் சுட்டனைக் குறிக்கும். இது 2001-ஆம் ஆண்டில் வெளிவந்த பிரண்ட்ஸ் என்ற தமிழ் நகைச்சுவைத் திரைப்படத்தில் நடிகர் வடிவேலு நடித்த கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டது. நடிகர் வடிவேலுவின் படம் பொதித்த சுட்டனைக் கொண்டு #Pray_for_Nesamani என்னும் ஹேஸ்டேக் (hashtag) மூலம் இணையத்தில் மிக விரைவாகப் பரவியது. இந்திய அளவில், அந்த வாரத்தில், டுவிட்டரில், முதல் இடத்தில் இருந்த #ModiSarkar2 என்னும் சுட்டனைப் பின்னுக்குத் தள்ளி முதல் இடம் பெற்றது .[1][2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Who is Neasamani? Meet the Real Actor Who Played the Popular Contractor Onscreen". News18.
  2. "#PrayForNaesamani: How Vadivelu outpaced 'Modi Sarkar 2' on Twitter". The Week.