சுட்டன்
சுட்டன் (meme[1][2][3], மீம்) என்பது குறிப்பிட்ட ஒரு பண்பாட்டினரிடையே ஒருவரிடமிருந்து மற்றொருவரிடம் படிப்படியே பரவும் கருத்து, நடத்தை அல்லது பாங்கு ஆகும் - அது பெரும்பாலும் குறிப்பிட்ட ஒரு நிகழ்வையோ கருத்தையோ அல்லது அந்தச் சுட்டன் சுட்டும் பொருளையோ உணர்த்தும் நோக்கொடு அமையும்.
சுட்டன்கள் எழுதல், பேச்சு, உடற்குறிப்புக்கள், சடங்குகள் ஆகியவை மூலமாகவோ அவைபோல இன்னொருவராற் பின்பற்றக்கூடிய வேறு எந்த வகையான நிகழ்வுகளின் மூலமாகவோ பண்பாட்டுச் சிந்தனைகள், குறியீடுகள், பழக்கவழக்கங்கள் ஆகியவற்றை ஒருவர் உள்ளத்தினின்று இன்னொருவர் உள்ளத்திற்குக் கொண்டுசெல்லும் உருப்படிகளாய் இயங்குகின்றன.
சுட்டன் என்ற கருத்தை ஏற்போர் உயிரியலுக்கு மரபணுக்கள் எப்படியோ அப்படியே சுட்டன்களும் பண்பாட்டிற்கும் என்று கருதுகின்றனர்; ஏனெனில் சுட்டன்களும் தம்மைத் தாமே பல்குவதாலும் உருமாறுவதாலும் தொடர்ச்சி நெருக்கடிக்கு உட்படுவதாலும் மரபணுக்கள்போலவே செயற்படுகின்றன[4] என்பது அவர்தம் கருத்தாகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "meme". Oxford Dictionaries (in ஆங்கிலம்). Archived from the original on 2019-05-23. பார்க்கப்பட்ட நாள் 2019-07-11.
- ↑ "meme Meaning in the Cambridge English Dictionary". Cambridge Dictionary (in ஆங்கிலம்).
- ↑ "meme noun". Oxford Learner's Dictionaries (in ஆங்கிலம்).
- ↑ Graham 2002