நெருஞ்சி
நெருஞ்சி Tribulus terrestris | |
---|---|
![]() | |
இலைகளும் பூவும் | |
Secure
| |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | தாவரம் |
பிரிவு: | பூக்கும் தாவரம் |
வகுப்பு: | Magnoliopsida |
வரிசை: | Zygophyllales |
குடும்பம்: | Zygophyllaceae |
பேரினம்: | Tribulus |
இனம்: | T. terrestris |
இருசொற் பெயரீடு | |
Tribulus terrestris லின்னேயசு[1] |
நெருஞ்சி அல்லது செப்புநெருஞ்சில் (Tribulus terrestris; Caltrop) ஒரு மருத்துவ மூலிகைக் கொடியாகும். நிலத்தில் படர்ந்து வளரும் இதன் வேர் நன்கு பரந்து ஆழமாகச் சென்றிருக்கும். இது இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் காணப்படுகிறது. நெருஞ்சியின் இலை, பூ, காய், வேர் ஆகிய அனைத்துமே மருத்துவப் பயன்பாடு உடையன.


பெயர்கள்[தொகு]
இதற்கு நெருஞ்சில், திரிகண்டம், நெருஞ்சிப்புதும், சுவதட்டம், கோகண்டம், காமரசி, கிட்டிரம், சுதம் போன்ற வேறு பெயர்களும் உண்டு. யானையின் பாதங்களைத் துளைத்து, அதைத் தலை வணங்கச் செய்வதால் ‘யானை வணங்கி’ என்ற பெயரும், காமத்தைப் பெருக்கும் தன்மை இருப்பதால், ‘காமரசி’ எனும் பெயரும் இதற்கு உள்ளன.[2]
விளக்கம்[தொகு]
நெருஞ்சிலானது மண் தரையில் பசுமையாகப் படரும் முட்கள் கொண்ட தரைபடர் செடியாகும். இந்தத் தாவரம் முழுவதிலும் வெண்ணிற ரோம வளரிகள் காணப்படும். மலர்கள் மஞ்சள் நிறத்தில் தோற்றமளிக்கும்.
மேற்கோள்[தொகு]
- ↑ "Tribulus terrestris information from NPGS/GRIN". www.ars-grin.gov இம் மூலத்தில் இருந்து 2008-12-21 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20081221210348/http://www.ars-grin.gov/cgi-bin/npgs/html/taxon.pl?100965. பார்த்த நாள்: 2008-03-18.
- ↑ டாக்டர் வி.விக்ரம் குமார் (21 சூலை 2018). "நலம் தரும் நெருஞ்சில்!". கட்டுரை (இந்து தமிழ்). https://tamil.thehindu.com/general/health/article24480837.ece. பார்த்த நாள்: 23 சூலை 2018.