நெம்யங்கு மலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நெம்யங்கு
Nemjung
நெம்யங்கு Nemjung is located in நேபாளம்
நெம்யங்கு Nemjung
நெம்யங்கு
Nemjung
நேபாளத்தில் இருப்பிடம்
உயர்ந்த இடம்
உயரம்7,140 m (23,430 ft) [1]
இடவியல் முக்கியத்துவம்1,920 m (6,300 ft) [1]
பட்டியல்கள்அல்ட்ரா
புவியியல்
அமைவிடம்மனாங்கு மாவட்டம்,
காண்டகி மண்டலம்,
வடக்கு மத்திய நேபாளம்
State/ProvinceNP
மலைத்தொடர்இமயமலை
Climbing
First ascent1983 இல் ஒரு சப்பானியக் குழு
Easiest routeபாறை/பனி/பனிக்கட்டி ஏற்றம்


நெம்யங்கு மலை (Nemjung) என்பது நேபாள நாட்டின் இமயமலைப் பகுதியில் உள்ள ஒரு மலைப்பகுதியாகும். நேபாளத் தலைநகர் காட்மாண்டூவில் இருந்து வடமேற்காக சுமார் 150 கிலோமீட்டர் அல்லது 93 மைல்கள் தொலைவில் நெம்யங்கு மலை அமைந்துள்ளது. மேலும் இம்மலை ஏழாயிரமடி சிகரங்கள் வகைப்பாட்டில் அடங்கும் மலையான மனசுலு மலைக்கு வடமேற்கில் 25 கிலோமிட்டர் தொலைவில் இருக்கிறது. இம்மலையின் அதிகபட்ச உயரம் 7140 மீட்டர்கள் அல்லது 23,425 அடிகளாகும்.

1983 ஆம் ஆண்டு சப்பான் நாட்டைச் சேர்ந்த ஒரு மலையேற்றக்குழு நெம்யங்கு மலையில் ஏறி வெற்றிகண்டது. அதன்பின்னர் 1994 ஆம் ஆண்டில் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த மலையேற்றக் குழுவினர் மற்றும் 2009 ஆம் ஆண்டில் பிரான்சு[2] நாட்டைச் சேர்ந்த குழுவினர்கள் பலமுயற்சிகள் மேற்கொண்டனர். 2009, அக்டோபர் 30 இல் ஒசாமுதனாபே தலைமையிலான சப்பானியக்குழு அதுவரையிலும் வெற்றி கொள்ள முடியாமலிருந்த மேற்கு முகடு மற்றும் மேற்கு முகப்பகுதியின் வழியாக நெம்யங்கு மலையின் உச்சியை அடைந்து வெற்றி கண்டனர்[3][4][5].

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "High Asia II: Himalaya of Nepal, Bhutan, Sikkim and adjoining region of Tibet". Peaklist.org. 2014-05-30 அன்று பார்க்கப்பட்டது.
  2. "French Climb South Spur of Nemjung". 2012-06-14 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-09-28 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  3. "Nemjung Climbed from the West". 2012-09-28 அன்று பார்க்கப்பட்டது.
  4. "Japanese Climb West Face of Nemjung". 2013-01-19 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-09-28 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  5. "2009: Nemjung, by D. MacDonald". 2012-08-17 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-09-28 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
"https://ta.wikipedia.org/w/index.php?title=நெம்யங்கு_மலை&oldid=3218924" இருந்து மீள்விக்கப்பட்டது