நெடுவாற் பராடிகல்லா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நெடுவாற் பராடிகல்லா
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கினம்
தொகுதி: முண்ணாணிகள்
வகுப்பு: பறவை
வரிசை: பசெரீன்கள்
குடும்பம்: சந்திரவாசி
பேரினம்: பராடிகல்லா
இனம்: P. carunculata
இருசொற் பெயரீடு
Paradigalla carunculata
லெசன், 1835

நெடுவாற் பராடிகல்லா (Paradigalla carunculata) என்பது நடுத்தர அளவிலான, அதாவது 37 செமீ நீளமான சந்திரவாசிப் பறவையினங்களைச் சேர்ந்த கரிய பறவையினம் ஒன்றாகும். இதன் வால் நீண்டு கூரியதாக இருக்கும். தனித்த நிறமாயுள்ள ஒரு சில சந்திரவாசிப் பறவையினங்களில் ஒன்றான இது பன்னிற அமைப்பைக் கொண்டிருப்பது இதன் சொண்டுக்குக் கீழே மஞ்சள், சிவப்பு மற்றும் இளம் நீல நிறத்திலான தொங்கு சதையிலாகும். இவ்வினத்தின் ஆண், பெண் பறவைகள் உருவமைப்பில் ஒத்திருப்பினும் பெண் பறவை ஒப்பீட்டளவிற் சிறியதாயும் நிறம் மங்கியதாயும் காணப்படும்.

சந்திரவாசிப் பறவைக் குடும்பத்தில் மிகக் குறைவாகவே அறியப்பட்டதான நெடுவாற் பராடிகல்லா இனம் இந்தோனேசியாவின் மேலைப் பப்புவா மாநிலத்தில் அருஃபாக் மலைகளுக்குத் தனிச்சிறப்பானதாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  • BirdLife International (2004). Paradigalla carunculata. 2006 ஐயுசிஎன் செம்பட்டியல். ஐயுசிஎன் 2006. தரவிறக்கப்பட்டது 9 May 2006. இவ்வினம் ஏன் தீவாய்ப்புக் கவலை குறைந்த இனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது என்பதற்கான நியாயப்படுத்தல்களைத் தரவுத்தளம் கொண்டுள்ளது.

வெளித் தொடுப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நெடுவாற்_பராடிகல்லா&oldid=1382556" இருந்து மீள்விக்கப்பட்டது