நெசஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கைடோ ரெனி வரைந்த தியனைராவைக் கடத்துதல், 1620-21, இலூவா அருங்காட்சியகம் .
லாரன்ட் மார்க்வெஸ்டேவின் நெச்சின் படைப்பான உருவாக்கபட தியனைராவைக் கடத்திச் செல்லும் போது அம்பால் தாக்கப்படும் நெசசின் சிலையின் 2006 ஆண்டைய படம்
ஜியாம்போலோக்னா, (1599), உருவாக்கிய ஹெராக்கிள்சும், நெசசும்

கிரேக்கத் தொன்மங்களில் குறிப்பிடப்படும் நெசஸ் (Nessus ( பண்டைய கிரேக்கம் : Νέσσος ) என்வன் ஹெராக்கிள்சால் கொல்லப்பட்ட ஒரு பிரபலமான குதிரை மனிதன் ஆவான். மேலும் இவவனது இரத்தக் கறையால் ஹெராக்லஸ் கொல்லபட்டார். இவன் சென்டாரோஸின் மகன். இவன் யூனோஸ் ஆற்றில் பயணிகளை அக்கரைக்கு கொண்டு செல்பவனாக இருந்தான்.

தொன்மவியல்[தொகு]

நஸ்ஸஸ் டூனிக் கதையில் இவனது பாத்திரத்திற்காக அறியப்படுகிறான். ஹெராக்கிள்ஸின் மனைவியான தியனைராவை ஆற்றைக் கடக்க சுமந்து சென்ற பிறகு, அவளுடன் உடலறவு கொள்ள முயன்றான். ஹெராக்கிள்ஸ் ஆற்றின் அக்கரையில் இருந்து இதைக் கண்டான். இதன்பிறகு ஐதரா பாம்பின் விஷம் பூசப்பட்ட அம்பை நெசஸின் மார்பில் குறிப்பார்த்து எய்தார். இதன்பிறகு நெசஸ் இறக்கும் தறுவாயில் விஷம் கலந்த தன் உதிரத்தில் தோய்த்த ஒரு மருந்தைத் தியமைனராவிடம் கொடுத்து, அததை ஹெர்க்குலிஸின் ஆடையில் தடவி, அவ்வாடையை அவன் அணிந்து கொள்ளும்படி செய்தால், அவளிடம் அவனுடைய அன்பு நிலைத் திருக்குமென்று கூறிவிட்டு, உயிர் துறந்தான். ஐதராவின் விஷம் தன் இரத்தில் கலத்து அதன் பாதிப்பு உள்ளதை அறிந்தே இவ்வாறு கூறினான்.

தியானைரா அவன் பேச்சை முட்டாள்தனமாக நம்பினாள். பின்னர், அயோல் என்ற அழகியினால் தனது கணவனின் மீதான அவளது நம்பிக்கை குறையத் தொடங்கியது. இதனால் அவள் ஹெராக்கிள்ஸின் புகழ்பெற்ற சிங்கத்தோல் சட்டையில் அந்த இரத்தத்தைக் கொஞ்சம் பூசி கணவருக்குக் கொடுத்தாள். ஹெராக்கிள்ஸ் வீரர்களின் கூட்டத்திற்குச் சென்றார். இதற்கிடையில், தியானைரா தற்செயலாக குதிரை மனிதனின் இரத்தத்தின் சிறுபகுதியை தரையில் கொட்டினாள். அது சூரிய ஒளி வெப்பதால் எரிய ஆரம்பித்ததைக் கண்டு திகிலடைந்தாள்.

அவள் அதை உடனடியாக அதன் ஆபத்தை உணர்ந்து, ஹெராக்கிள்சை எச்சரிக்க தனது தூதரை அனுப்பினாள். ஆனால் அவர் வந்துசேர மிகவும் தாமதமானதால் காலம் கடந்துவிட்டது. அங்கியில் இருந்த நஞ்சு ஹெராக்கிள்சின் தோலில் ஊடுருவி அவரை எரிக்கத்தொடங்கியது. இதனால் ஹெரக்கிள்ஸ் மெதுவாகவும் வேதனையுடனும் இறக்கத் தொடங்கினார். இறுதியில் தீப்பிழம்புக்கு தன்னை இரையாக்கி உயிர் துறந்தார். ஹெராக்கிள்சை சீயஸ் ஒலிம்பிய மலைக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவரது வீர செயல்களைப் பாராட்டி தேவர்கள் வரவேற்றனர். [1] [2] [3]


சாஃபக்கிளீசின் நாடகமான டிராச்சினியாவில் இந்த தொன்மக்கதையை அடிப்படையாக கொண்டது.

குறிப்புகள்[தொகு]

  1. Pseudo-Hyginus. "Fabulae 34 & 36".
  2. Pseudo-Apollodorus. "Bibliotheca 2.7.6-7".
  3. Ovid. "Metamorphoses 9.98-272".

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நெசஸ்&oldid=3068344" இலிருந்து மீள்விக்கப்பட்டது