நெக்கெர் கனசதுரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நெக்கர் கனசதுரம்: ஆழம் பற்றிய அறிகுறி எதுவும் தராத ஒரு கம்பிச் சட்டக் கனசதுரம்.

நெக்கெர் கனசதுரம் (Necker cube) என்பது, சுவிசுப் படிகவியல் வல்லுனர் லூயிசு ஆல்பர்ட் நெக்கர் என்பவரால், சாய்செவ்வகமாக 1832 இல் முதன்முதலாக வெளியிடப்பட்ட ஒளியியல் தோற்றமயக்க வரைபடம் ஆகும்.[1]

தோற்ற மயக்கம்[தொகு]

நெக்கர் கனசதுரம் ஒரு தோற்ற மயக்கக் கோட்டுப் படம். இதன் தாக்கம் ஆர்வத்தைத் தூண்டக்கூடியது. ஏனெனில், படத்தின் ஒவ்வொரு பகுதியுமே மயக்கத்துக்கு உரியது, இருந்தும் முழுவதும் முரணின்றி அமையும் வகையில் படத்தின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் பொருத்தமானதை மனிதரின் பார்வைத் தொகுதி எடுத்துக்கொள்ளும். மனிதப் பார்வைத் தொகுதியின் கணினி மாதிரிகளைச் சோதிப்பதற்கு, சில வேளைகளில் நெக்கெர் கனசதுரத்தைப் பயன்படுத்துவது உண்டு. மனிதரின் பார்வைத் தொகுதியைப் போலவே, இம்மாதிரிகளும் நெக்கர் கனசதுரத்தை முரண்பாடில்லாமல் புரிந்து கொள்கின்றனவா என்பதை அறியவே இச்சோதனை நிகழ்த்தப்படுகிறது.

ஒரு கனசதுரத்தின் விளிம்புகள் முரண்பாடான முறையில் ஒன்றை ஒன்று வெட்டிச் செல்லுமானால், அது இயலாப் பொருளுக்கு, குறிப்பாக இயலாக் கனசதுரத்துக்கு, எடுத்துக்காட்டாக அமையும்.

நெக்கெர் கனசதுரமும் (இடம்), இயலாக் கனசதுரமும் (வலம்).

அருகில் உள்ள படத்தில், இடப்பக்கத்தில் உள்ள கனசதுரத்தைப் பார்க்கும் பெரும்பாலானோர் கீழ் இடப்புறம் உள்ள பக்கத்தையே முன்னுக்கு உள்ள முகமாக எடுத்துக்கொள்வர். மனிதர் பொருட்களை, அடிப்பக்கம் தெரியும்படி கீழிருந்து மேல்நோக்கிப் பார்க்காமல், பெரும்பாலும் மேலிருந்து கீழ்நோக்கி மேற்பக்கம் தெரியும் வகையில் பார்ப்பதால், மனித மூளை கனசதுரத்தை மேலிருந்து பார்ப்பதுபோல் எடுத்துக்கொள்ள விரும்புகிறது எனலாம்.[2][3] இடமிருந்து வலமாகப் பார்ப்பது மூளையின் இயல்பான விருப்பமாகவும்,[4] அதனால், முதலில் பார்க்கும் இடப்பக்க முகத்தை முன்பக்கமாகப் புரிந்துகொள்கிறது என்ற இன்னொரு காரணமும் இருக்கக்கூடும்.

பார்வையை வடிவத்தின் வெவ்வேறு பகுதிகளில் குவியப்படுத்துவதன் மூலம் கனசதுரத்தின் ஏதாவதொரு உறுதியான தோற்றத்தைப் பெறமுடியும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Necker, L.A. (1832). "Observations on some remarkable optical phaenomena seen in Switzerland; and on an optical phaenomenon which occurs on viewing a figure of a crystal or geometrical solid". London and Edinburgh Philosophical Magazine and Journal of Science 1 (5): 329–337. doi:10.1080/14786443208647909. 
  2. Troje, McAdam 2010.
  3. Ward, Brian 2015, ப. 931.
  4. Khan, Aarlenne; J. Douglas Crawford (June 2001). "Ocular dominance reverses as a function of horizontal gaze angle". Vision Research 21 (14): 1743–8. doi:10.1016/S0042-6989(01)00079-7. பப்மெட்:11369037. http://www.sciencedirect.com/science/article/pii/S0042698901000797. பார்த்த நாள்: 26 April 2014. 

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Necker cubes
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நெக்கெர்_கனசதுரம்&oldid=3218878" இருந்து மீள்விக்கப்பட்டது