ஏம்ஸ் அறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Ames room.svg
ஏம்சு அறை

ஓர் குறிப்பிட்ட இடத்திலிருந்து கண்களின் மூலமோ அல்லது நிழற்பக் கருவி மூலமோ அவதானிக்கும் போது சமமான திணிவு மற்றும் நீள அகலமுடைய பொருளொன்று ஒரு மூலையில் சிறிதாகவும் ஒரு மூலையில் பெரிதாகவும் காட்டும் அறையே ஏம்ஸ் அறை (Ames Room) எனப்படும். இது ஒரு ஒளியியற்கண் மாயம் ஆகும். இவ்வறை சிறிய மற்றும் பெரிய பொருட்களையும் ஒரே அளவுடையதாகக் காட்டும் மாயத்தோற்றமுடையது. இதனை அடல்பேர்ட் ஏம்ஸ் (இளையவர்) என்பவர் 1934இல் கண்டுபிடித்து அதற்கு அடுத்த ஆண்டில் உருவாக்கினார்.

இதனைப் பார்க்கும் போது ஒரு சாதாரண சதுர அறை போலத் தென்படும். எனினும் இது உண்மையில் சரிவக உருவமுடையது. இதனால் ஒரு மூலையில் உள்ள நபர் பூதாகாரமாகவும் இன்னொரு மூலையில் உள்ளவர் குள்ளமாகவும் தென்படுவார். அந்நபரைத் தவிர அவ்வறையின் ஏனைய அனைத்து பொருட்களும் வெளியிலிருந்து அவதானிப்போருக்கு சாதாரணமாகவே தென்படும். உண்மையில் அவை அனைத்தும் ஒரே அளவுடையவை அல்ல. இவ்வாறான மாயத்தோற்றத்தை உருவாக்கும் வித்தத்தில் இவ்வறை உருவாக்கப்படும்.

ஏம்ஸ் அறை
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏம்ஸ்_அறை&oldid=2179969" இருந்து மீள்விக்கப்பட்டது