நூருத்தீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நூருத்தீன்

நூருத்தீன் தமிழக எழுத்தாளர். தொடக்கத்தில் ஆனந்த விகடன், சமரசம், முஸ்லிம் முரசு போன்ற பத்திரிகைகளில் கதைகள், கவிதைகளில் துவங்கி, இணைய தளங்கள் பலவற்றிலும் எழுதத் தொடங்கிய இவர் இசுலாம் குறித்த தோழர்கள் என்ற புத்தகம் ஒன்றினை எழுதியிருக்கிறார். தவிர பல பத்திரிகைகளிலும்.. திண்ணை, தமிழோவியம் உள்ளிட்ட இணைய இதழ்களிலும் எழுத்துப் பங்களிப்பு அளித்திருக்கிறார். தற்போது இவர் தோழியர் எனும் புதிய தொடரையும் எழுதி வருகிறார்.

தாருல்_இஸ்லாம்_(இதழ்) ஆசிரியரும் இசுலாமிய அறிஞருமான பா.தா. என்று அழைக்கப்படும் பா. தாவூத்ஷாவின் பேரனான நூருத்தீன், தாருல்இஸ்லாம்ஃபேமிலி என்ற பெயரில் இணைய தளம் நடத்தி வருகிறார்.

நூல்கள்[தொகு]

  • தோழர்கள்
  • தோழியர்
  • மனம் மகிழுங்கள்

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நூருத்தீன்&oldid=984468" இருந்து மீள்விக்கப்பட்டது