நீலப்பாடி நாகநாதசுவாமி கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நீலப்பாடி நாகநாதசுவாமி கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.

அமைவிடம்[தொகு]

இக்கோயில் திருவாரூர்-நாகப்பட்டினம் சாலையில் திருவாரூருக்குக் கிழக்கே 9 கிமீ தொலைவில், சாலையின் வடப்புறத்தில் சற்றே ஒதுங்கிய நிலையில் உள்ளது.[1]

இறைவன், இறைவி[தொகு]

இங்குள்ள இறைவன் நாகநாதசுவாமி, இறைவி சௌந்தரநாயகி.வசிஷ்டர், விசுவாமித்திரர், நாரதர் ஆகியோர் இத்தலத்தில் வழிபட்டுள்ளனர்.[1]

அமைப்பு[தொகு]

அஷ்டபுஜ துர்க்கை சன்னதி இக்கோயிலில் உள்ளது. கருடனுக்கும் பாம்புக்கும் பகை என்று கூறப்பட்டாலும் இருவரும் ஒரே இடத்தில் இறைவனை வழிபட்டு சாபம் நீங்கப் பெற்ற அதிசயத்தைப் பெற்ற பெருமையுடையது இக்கோயிலாகும்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 திருக்கோயில்கள் வழிகாட்டி, நாகப்பட்டினம் மாவட்டம், தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை, 2014

வெளியிணைப்புகள்[தொகு]