நிஹோங்கமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
A black and white drawing of the back of a woman's hairstyle. The bun is wrapped with a number of fabric ties.
சிகை அலங்காரம்

நிஹோங்கமி (日本髪, lit. 'சப்பானிய முடி') என்பது பல பாரம்பரிய சப்பானிய சிகை அலங்காரங்களுக்குப் பயன்படுத்தப்படும் சொல். அவற்றின் அமைப்பு சமூகத்தில் தனித்துவமானதாகக் கருதப்படுகிறது.

பாரம்பரியமாக, பெரும்பாலான சிகை அலங்காரங்களின் அமைப்பு தலையின் ஓரத்தில் இரண்டு "இறக்கைகள்" போன்ற அமைப்பை கொண்டது. மேலும் தலையின் பின்பகுதியை நோக்கி மேல்நோக்கி வளைந்து ஒரு மேல் முடிச்சு போன்ற அமைப்பை கொண்டது. பாரம்பரிய முடி அணிகலன்களுடன் இவை அலங்கரிக்கப்பட்டு இருக்கும். அவை பாலினம், வயது, வேலை பங்கு மற்றும் சமூக நிலை ஆகியவற்றின் அடிப்படையில் வேறுபடுகின்றன.

பெரும்பாலான பாணிகள் அபுரா என அழைக்கப்படும் மெழுகால் கடினப்படுத்தப்பட்டு வடிவமைக்கப்படுகின்றன. மேலும் மூங்கில் அல்லது பெட்டி மரத்தால் செய்யப்பட்ட பிரத்யேக-செதுக்கப்பட்ட சீப்புகளால் வடிவமைக்கப்படுகின்றன. அலங்காரம் செய்வதற்கு முன் முடியை நேராக்க சூடான இடுக்கிகள் பயன்படுத்தப்பட்டன. இந்த முறையில் வடிவமைக்கப்பட்ட முடி பொதுவாக வாரந்தோறும் மறுசீரமைக்கப்படுகிறது, மேலும் சில சமயங்களில் தரையிலிருந்து உயர்த்தப்பட்ட தலையணையில் தூங்குவது அவசியமாகிறது.

நிஹோங்கமி இப்பொழுது பொதுவாக அணியப்படுவதில்லை, இன்று பெரும்பாலும் மைகோ, கெய்ஷா மற்றும் சுமோ மல்யுத்த வீரர்களில் காணப்படுகின்றன. நிஹோங்கமியின் பல்வேறு பாணிகள் நடிகர்களால்  அணியப்படுகின்றன, மேலும் எடோ காலத்தில் பொதுவான இருந்த பல பாணிகள் கபுகி நாடகங்களில் மீண்டும் உருவாக்கப்படுகின்றன. நிஹோங்கமியின் சில பாணிகள் நன்கு ஆவணப்படுத்தப்பட்டிருந்தாலும், மற்றவை, காலப்போக்கில் தெளிவற்ற நிலைக்குச் சென்றுவிட்டன.

வரலாறு[தொகு]

இப்போது நிஹோங்கமி என்று பெயரிடப்பட்ட பல சிகை அலங்காரங்கள் எடோ காலத்தில் உருவாக்கப்பட்டன. நீண்ட சிகை அலங்காரங்கள், கழுத்தின் பின்பகுதியில் குடுமி மற்றும் தலையின் இருபுறமும் 'இறக்கைகள்' போன்ற அமைப்பை கொண்ட பாணிகளை நோக்கி மாறியது. கபுகி நடிகர்கள் மத்தியில் தோன்றிய இந்தப் போக்கு, சப்பான் முழுவதிலும் காணப்படும் பொதுவான நாகரீகமாக மாறியது.

இந்த நேரத்தில், சப்பானிய பெண்களால் பலவிதமான மாறுபட்ட சிகை அலங்காரங்கள் உருவாக்கப்பட்டு அணியப்பட்டன. பொதுவாக வயது, சமூக வர்க்கம் மற்றும் தொழிலின் அடிப்படையில் சிகை அலங்காரங்கள் அணியப்படுகின்றன. எடோ காலத்தில் உருவாக்கப்பட்ட அத்தகைய சிகை அலங்காரம் ஷீமாடா ஆகும், இது பொதுவாக இளவயது பெண்கள் அணிந்து வந்தனர். ஷீமாடா பல பிரபலமான சிகை அலங்காரங்களுக்கு அடிப்படையாக அமைந்தது. டோரோபின் ஷீமாடா எடோ காலத்தின் மத்தியில் உருவாக்கப்பட்டது; தலையின் பக்கவாட்டில் பரந்த இறக்கைகளைக் கொண்டிருக்கும், அதன் பெயர் ஒரு நபரின் பின்னால் உள்ள பகுதியை ஒரு சிகை அலங்காரத்தின் இறக்கைகள் மூலம் பார்க்க முடியும், இது ஒரு டோரோ விளக்கு வழியாக பார்க்க முடியும் என்று கூறப்பட்டது.[1] ஷீமாடா பரவலான புகழ் பெற்றது, மேலும் கலைஞர்களால் அச்சிட்டுகளில் பொதுவாக சித்தரிக்கப்பட்டது.

வரலாற்று ரீதியாக, கேப்பசு-ஷி என அழைக்கப்படும் பாரம்பரிய சிகையலங்கார நிபுணர்கள், கிட்டத்தட்ட முழுக்க முழுக்க பெண்களாக இருந்தனர. சிகை அலங்காரங்களை உருவாக்கப் பயன்படுத்தப்படும் மூங்கில் சீப்புகள் கைவினைஞர்களால் கையால் செய்யப்பட்டவை. இருப்பினும், 19 ஆம் நூற்றாண்டின் மத்தியில் ஒசாகா அருகே 200 கைவினைஞர்கள் சீப்புகளை உருவாக்கினர், ஆனால் நவீன காலத்தில் பாரம்பரிய சீப்புகளை உற்பத்தி செய்ய சில கைவினைஞர்கள் மட்டுமே உள்ளனர்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Description of Japanese Hairstyles (日本髪の解説)" (in Japanese). Archived from the original on 2016-02-24. பார்க்கப்பட்ட நாள் 2014-10-06.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  2. "Combs". traditionalkyoto.com. Traditional Kyoto. Archived from the original on 17 June 2020. பார்க்கப்பட்ட நாள் 16 July 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிஹோங்கமி&oldid=3897546" இலிருந்து மீள்விக்கப்பட்டது