நிஷா பகுஜா
நிஷா பகுஜா | |
---|---|
2012 இல் நிஷா பகுஜா | |
பிறப்பு | நிஷா பகுஜா 3 சூன் 1967 புது தில்லி, இந்தியா |
பணி | எழுத்தாளர், திரைப்பட படைப்பாளி, கலைஞர் |
நிஷா பகுஜா (Nisha Pahuja, பிறப்பு 1967) என்பவர் ஒன்டாரியோவின் டொராண்டோவில் உள்ள ஒரு இந்திய வம்சாவளி கனடிய திரைப்படப் படைப்பாளி ஆவார். [1] [2]
இவரது படைப்புகளில் அகாதமி விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஆவணப்படமான டு கில் எ டைகர் படமானது டிஐஎஃப்எஃப், பாம் ஸ்பிரிங்ஸ் சர்வதேச திரைப்பட விழா, டாக் அவிவ் மற்றும் கனடியன் ஸ்கிரீன் விருதுகள் ஆகிய விழாக்களில் இருந்து 19 விருதுகளைப் பெற்றது. இப்படம் 2023 இலையுதிர்காலத்தில் அமெரிக்கத் திரையரங்குகளில் வெளியிடப்படும். இண்டி வயரில் ஆன் தாம்சன் 2024 ஆம் ஆண்டிற்கான ஆஸ்கார் போட்டிப் படங்களின் பட்டியலில் இதன் பெயரைக் குறிப்பிட்டார். [3] [4] மிண்டி கலிங் மற்றும் தேவ் படேல் இருவரும் ஆண்டி கோஹன், அனிதா லீ, அதுல் கவாண்டே, ஆண்ட்ரூ டிராகௌமிஸ் மற்றும் பிறருடன் இணைந்து செயல் தயாரிப்பாளர்களாக படத்தில் கையெழுத்திட்டனர். [2]
பகுஜாவின் முந்தைய படங்களில் எம்மி விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட தி வேர்ல்ட் பிஃபோர் ஹெர், பாலிவுட் பவுண்ட் என்ற சிறப்பு ஆவணப்படம் மற்றும் டயமண்ட் ரோடு என்ற மூன்று பாகத் தொடர் போன்றவை அடங்கும்.
இந்த எழுத்தாளர்/கலைஞர்/இயக்குநர் ஆங்கில இலக்கியம் படிப்பதன் மூலமும், சமூக சேவைகளில் பணிபுரிவதன் மூலமும், ஆவணப்பட ஆய்வாளராக பணியாற்றுவதன் மூலமும் திரைப்படத் துறைக்கு அறிமுகமானவர். [1] 2014 இல் பகுஜா ராக்ஃபெல்லர் அறக்கட்டளை பெல்லாஜியோ மையத்தில் ஒரு உறுப்பினராக அழைக்கப்பட்டார். பின்னர் 2016-2020 வரை அவர்களின் கலைத் தேர்வுக் குழுவில் பணியாற்றினார். [5]
ஆரம்ப கால வாழ்க்கை
[தொகு]பகுஜா 1970 களின் முற்பகுதியில் தன் குழந்தைப் பருவத்தில் தன் குடும்பத்துடன் இந்தியாவில் இருந்து கனடாவிற்கு சென்றார். [6] வளரும் நிலையில்இருந்த நிஷா கபுஜா, ஒரு புதிய "மேற்கத்திய வாழ்க்கை முறை"யை எதிர்கொண்டதால், துன்பங்களை அடைந்தார். [7] வளரும் பருவத்தில் இவர் பாலிவுட் படங்களால் பெரிதும் தாக்கத்துக்கு உள்ளானார். ஆனால் இவரது படைப்பாற்றல் நாட்டமானது இலக்கியத்தில் மிகுந்த கவனம் செலுத்தியது. [7]
தொழில்
[தொகு]பகுஜா புனைகதை எழுதும் நோக்கத்துடன் டொராண்டோ பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியம் பயின்றார். [8] [9] உள்ளூர் கனேடிய படத் தயாரிப்பாளரான கீதா சோந்தியை சந்தித்த ஒரு வாய்ப்பில், இவரை சிபிசி ஆவணப்படமான "சம் கிண்ட் ஆஃப் அரேஞ்ச்மெண்ட்" படத்திற்கு ஆய்வாளராக கீதா நியமித்தார். அதன் வழியாக ஆவணப்படம் தயாரிப்பதற்கான பாதையில் இவரை அழைத்துச் சென்றார். [8]
பகுஜா ஆவணப்படப் படைப்பில் கவனம் செலுத்த விரும்பினார். ஏனெனில் பெரிய சமூகப் பிரச்சனைகளை, உண்மையான கதைகளுடன் உண்மையான நபர்களைத் தேடுவதை இவர் விரும்பினார். [1]
தனது தொழில் வாழ்க்கையின் ஆரம்பத்தில், பகுஜா கனேடிய திரைப்பட தயாரிப்பாளர்களான ஜான் வாக்கர் மற்றும் அலி காசிமி ஆகியோருடன் ஆய்வாளராக பணியாற்றினார். [10] விரைவில், பகுஜா தனது சொந்த திரைப்படப் படைப்பு வாழ்க்கையைத் தொடங்கினார். [1]
இவரது படங்கள் வட அமெரிக்கா, இந்தியா உட்பட பன்னாட்டு அளவில் வெற்றி பெற்றுள்ளன. [11] தி வேர்ல்டு பிஃபோர் ஹெர், இது இந்தியாவில் இளம் பெண்களின் சிக்கலான மற்றும் முரண்பட்ட வாழ்கைச் சூழலை ஆராய்ந்தது. இது மிஸ் இந்தியா போட்டியில் கலந்து கொள்ளும் பெண்களும், வி.இ.பரிசத்தின் மகளிர் பிரிவான துர்கா வாகினியில் பயிற்சி பெறும் சிறுமிகள் என அவர்களைப் பின்தொடர்ந்தது. [12] "தி வேர்ல்ட் பிஃபோர் ஹெர்" டிரிபெகா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது, அங்கு சிறந்த ஆவணப்படத்திற்கான விருதைப் பெற்றது. இந்தப் படம் உலகளவில் பல விழாக்களில் திரையிடப்பட்டது, சிறந்த கனடிய ஆவணப்படம் ஹாட் டாக்ஸ் மற்றும் வான்கூவர் திரைப்பட விமர்சகர்களின் சிறந்த கனடிய ஆவணப்பட விருது உட்பட பல விருதுகளைப் பெற்றது.
2012 தில்லி கும்பல்-வல்லுறவு வழக்கு நடந்த பிறகு, மகளிர் உரிமைகள், பெண் சிசுக்கொலை மற்றும் சிசுக்கொலை ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில், இந்தியா முழுவதும் இவரது தி வேர்ல்டு பிஃபோர் ஹிர் திரைப்படத்தை திரையிட நிஷா உறுதி கொண்டார். இவரது குழுவுடன் இவர் அறக்கட்டளைகள் மற்றும் கூட்டுசேகரம் மூலம் நிதி திரட்டினார். [13] நிஷா தனது கனவைத் தொடர, $50,000 [14] பணத்தைத் திரட்டும் பளம் இறல்கினார். பரப்புரையால் அதன் அசல் இலக்கை $57,000 ஐ எட்டியது
பின்னர் பகுஜாவும் அவரது குழுவினரும், இந்தியாவின் நான்கு மாநிலங்களுக்குச் சென்று, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் மகளிர் உரிமை அமைப்புகளுடன் இணைந்து, பின்தங்கிய சமூகங்களில் படத்தை திரையிட்டு பல்வேறு பார்வையாளர்களுடன் ஆழமான உரையாடல்களை நிகழ்த்தினர். தாக்க பரப்புரையின் வெற்றி, பல்வேறு நிலைகளில் சமூக மாற்றத்தை உருவாக்குவதில் ஆவணப்படங்களின் முக்கியத்துவத்தை பகுஜாவுக்கு உணர்த்தியது. [13]
திரைப்படவியல்
[தொகு]- பாலிவுட் பவுண்ட் (2003)
- டயமண்ட் ரோடு (2007)
- தி வேல்ட் பிபோர் ஹெர் (2012)
- டு கில் எ டைகர் (2022)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 Indiewire. "Meet the 2012 Tribeca Filmmakers #5: 'The World Before Her' Director Nisha Pahuja. Indiewire, 2012
- ↑ 2.0 2.1 Pahuja, Nisha. "To Kill A Tiger". Media Space. National Film Board of Canada. பார்க்கப்பட்ட நாள் 2023-10-09.
- ↑ Thompson, Anne. "2024 Oscars: Best Documentary Feature Predications". IndieWire. IndieWire. பார்க்கப்பட்ட நாள் 2023-10-09.
- ↑ Cohn, Gabe. "Here Are the Most Anticipated Movies of Fall 2023". The New York Times. பார்க்கப்பட்ட நாள் 2023-10-09.
- ↑ The Rockefeller Foundation, 2015
- ↑ "Cincinnati World Cinema "The World Before Her"". Archived from the original on 2018-02-04. பார்க்கப்பட்ட நாள் 2024-02-28.
- ↑ 7.0 7.1 Ali, Firdaus, "Bollywood Calling" Rediff Movies, 2002
- ↑ 8.0 8.1 "(2015, 8 March). Being The Change. The Tribune". Archived from the original on 2018-08-21. பார்க்கப்பட்ட நாள் 2024-02-28.
- ↑ Pahuja, N. (2015, 1 January). A Conversation with India. UofT Magazine
- ↑ Robinson, T., "Transcending Tribeca: Nisha Pahuja of 'The World Before Her' A.V. Club 2012
- ↑ IBN "'The World Before Her' director Nisha Pahuja says she doesn't want to direct Bollywood films" Press Trust of India 2014
- ↑ Pahuja, Nisha (10 June 2014). "Help Comes in Small Measures". The Hindu. https://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/help-comes-in-small-measures/article6098595.ece. பார்த்த நாள்: 20 August 2018.
- ↑ 13.0 13.1 Thakur, Tanul. "The story behind a successful kickstarter film project" The Sunday Guardian, 2014
- ↑ Metro Plus "Help Comes in Small Measures" The Hindu 2014
வெளி இணைப்புகள்
[தொகு]- அதிகாரப்பூர்வ வலைதளம் பரணிடப்பட்டது 2015-09-24 at the வந்தவழி இயந்திரம்