உள்ளடக்கத்துக்குச் செல்

நிளார் என். காசிம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நிளார் என். காசிம்
நிளார் என். காஸிம்
பிறப்புஇலங்கை மாத்தறை
பணிஎழுத்தாளர், கவிஞர், பத்திரிகையாளர், பாடலாசிரியர், இலத்திரனியல் ஊடகவியலாளர்

நிளார் என். காசிம் (Nilar N. Cassim) இலங்கை மாத்தறையைப் பிறப்பிடமாகக் கொண்ட கவிஞர், எழுத்தாளர், பாடலாசிரியர், பத்திரிகையாளர், இலத்திரனியல் ஊடகவியலாளர்.

தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட இவர் தனது தொடக்கக் கல்வியை மாத்தறை ராகுல வித்தியாலத்தில் சிங்கள் மொழியில் தொடர்ந்தார். தனது மேனிலைக் கல்வியை கொழும்பு ஸ்ரீ ஜயவர்த்தன பல்கலைக்கழகத்தில் நிறைவு செய்தார். சிங்களத்தைச் சிறப்புப் பாடமாகக் கற்றுத் தேறினார்.[1]

பாடசாலையில் கற்கும் காலத்திலேயே இவர் தனது முதல் கவிதையை எழுதியிருக்கின்றார். அதன்பின்னர் அவர் மாத்தறையில் இயங்கும் உருகுணு சேவையில் இணைந்து அதில் இஸ்லாமிய நிகழ்ச்சிகளை சிங்கள மொழிமூலம் ஒலிபரப்புச் செய்தார்.

500க்கும் மேற்பட்ட சிங்களப் பாடல்களைப் இயற்றியுள்ளார். இவரது பாடல்களை இலங்கையின் புகழ்பெற்ற பாடகர்கள் பாடியுள்ளனர். இலங்கையின் முன்னணி இசையமைப்பாளர்கள் இசையமைத்துள்ளனர்.[1]

இவர், தமிழ்க் கவிஞர்களின் கவிதைகளைச் சிங்களத்தில் பெயர்த்து “சகோதர பியாபத்“ எனும் நூலாகத் தந்திருக்கின்றார். இது எஸ்.கே. கொடகே பதிப்பகத்தாரின் பதிப்பாக வெளிவந்துள்ளது.

தமிழ் இலக்கிய, கலாச்சாரம் சார்ந்த பல கட்டுரைகளை சிங்கள நாளேடுகளில் 2 தசாப்தத்துக்கும் மேலாகத் தந்துகொண்டிருக்கின்றார். இவர், சிறந்த ஓவியருமாவார்.

எழுதிய நூல்கள்[தொகு]

சான்றாதாரம்[தொகு]

  1. 1.0 1.1 "Nilar; the Bridge between the Barriers". சண்டே டைம்சு. பார்க்கப்பட்ட நாள் 30 சூலை 2016.
  2. http://www.sarasavi.lk/Book/Asalvesiyage-Sahithya-9799558760337
  3. http://www.sarasavi.lk/Book/Demala-Huruwa-9556612122
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிளார்_என்._காசிம்&oldid=2697509" இலிருந்து மீள்விக்கப்பட்டது